திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யுடன் மோதியதால் வந்த இடம் தெரியாமல் தடுமாறும் விக்ரம்.. அடிமேல் அடி வாங்கும் பரிதாபம்

Vikram and Vijay : சமீபத்தில் விக்ரமுக்கு நேரம் சரியில்லையோ என்னமோ, நடிக்கும் படங்கள் பெருசாக மக்களிடம் எடுபடவில்லை. என்னதான் உடலை வருத்திக் கொண்டு கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பை கொடுத்தாலும் முன்மாதிரி இவருடைய படத்திற்கு வரவேற்பு கிடைக்க மாட்டேங்குது. ஆனாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து இருந்தார்கள். அதன்படி இப்படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன் வெளியானது. ஆனால் வெளியாகியும் யாரும் கண்டு கொள்ளாத படி வந்த இடம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அதற்கு காரணம் லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நவம்பர் 1ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதை மூன்று நாட்கள் முன்னதாகவே அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்கள். இது தெரிந்தும் லியோ சக்சஸ் மீட்டிங் நடக்கும் அதே நாளில் விக்ரம் அவருடைய தங்கலான் படத்தின் டீசரை வெளியிட்டது தான் இதற்கு முக்கிய காரணம்.

Also read: 20 வருடங்களுக்குப் பின் விக்ரம் செய்யும் அதே கதாபாத்திரம்.. தங்கலான் படத்தின் உண்மையை உளறிய சியான்

அதாவது அன்றைக்கு ஒரே நேரத்தில் இந்த இரண்டு விஷயமும் நடந்ததால் அனைவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது எது என்றால் விஜய் கலந்து கொண்ட லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை தான். அதனால் தங்கலான் டீசரை யாருமே கண்டு கொள்ளவில்லை. இதற்கு இடையில் படக்குழு, அன்றைக்கு டீசரை ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லியும் விக்ரம் கேட்கவில்லை.

அதனால் இப்ப வரை அப்படி ஒரு படத்தின் டீசர் வெளிவந்தது என்று யாருக்குமே தெரியாத அளவிற்கு போய்விட்டது. ஆனால் அந்த படத்தின் கதையும் சரி அவருடைய நடிப்பும் சரி ரொம்பவே பாராட்டுக்குரியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நல்ல படம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

இதற்கெல்லாம் காரணம் விஜய் ஒரு விஷயத்தில் இறங்குகிறார் என்று தெரிந்தும் அவருடன் மோதியதால் விக்ரமுக்கு ஏற்பட்ட அடிதான். இப்படி தொடர்ந்து சில விஷயங்களில் அடிக்கு மேல் அடி வாங்கிக் கொண்டு பரிதாபமாக தவித்து வருகிறார். அட்லீஸ்ட் படம் ரிலீஸ் ஆனதும் மக்களுக்கு பிடித்த மாதிரி சரியாக வரவேற்பு கிடைத்தால் விக்ரமுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Also read: சூர்யா, கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ரஜினி, விஜய் எல்லாம் பின்னாடி தான்

Trending News