Thalapathy Vijay: நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். விஜய் நடித்தாலே போதும் படம் கோடிக்கணக்கில் வசூலித்து விடும் என்பதுதான் இப்போதைய கோலிவுட்டின் நிலைமை ஆனால் ஆரம்ப காலத்தில் விஜய் சந்தித்த அவமானங்கள் அதிகம். விஜய்க்கு இந்த கேரக்டரில் நடிக்கவே தெரியாது என பழம் பெறும் நடிகர் நாகேஷ் சவால் விட்ட கதையெல்லாம் நடந்திருக்கிறது.
இப்போது இருக்கும் முன்னணி ஹீரோக்களை எல்லாம், அவர்களது தொடக்க காலத்தில் விமர்சித்த மூத்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படித்தான் விஜய்க்கு இந்த கேரக்டரில் நடிக்கவே தெரியாது என இயக்குனரிடம் நாகேஷ் சண்டை போட்டு இருக்கிறார். இந்த பிரச்சனையை விஜய் எப்படி சமாளித்தார் என்பதை பற்றி பார்க்கலாம்.
விஜய் வேண்டாம் என சண்டை போட்ட நாகேஷ்:
விஜய் ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின், மற்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் பண்ண தயாராக இல்லை. அதனால் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் நாளைய தீர்ப்பு, ரசிகன், மாண்புமிகு மாணவன், தேவா போன்ற படங்களை இயக்கினார். விஜய்க்கு முதன் முதலில் வாய்ப்பு கொடுத்தது இயக்குனர் விக்ரமன் தான்.
Also Read:விஜய்யுடன் மோதியதால் வந்த இடம் தெரியாமல் தடுமாறும் விக்ரம்.. அடிமேல் அடி வாங்கும் பரிதாபம்
விக்ரமன் பூவே உனக்காக படத்தில் மூத்த நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து இருக்கிறார். இதனால் நம்பியார் மற்றும் நாகேஷ் இடம் கதையை சொல்லி இருக்கிறார். நாகேஷ் கதையை கேட்டு முடித்துவிட்டு இந்த படம் முழுக்க கதாநாயகனுக்கு தான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. இது போன்ற கேரக்டரில் விஜய்க்கு நடிக்க வராது, அவர் வேண்டாம் என சொல்லி இருக்கிறார்.
நாகேஷ் இப்படி சொன்னதற்கான காரணம் விஜய் நடித்த முந்தைய படங்கள் தான். கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் மட்டுமே விஜய் நடித்து வந்ததால் இப்படி ஒரு படத்தில் அவரால் நடிக்க முடியாது என நாகேஷ் நினைத்திருக்கிறார். ஆனால் இயக்குனர் விக்ரமன் விஜய் மேல் நம்பிக்கை வைத்து பூவே உனக்காக படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
விஜய் படப்பிடிப்பு தளங்களில் நடிப்பதை பார்த்து நாகேஷ் மிரண்டு போய்விட்டாராம். நாகேஷுக்கு மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ஒரு நல்ல நடிகன் என நிரூபித்த படம் பூவே உனக்காக தான். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. இதன் பின்னர் காலமெல்லாம் காத்திருப்பேன், காதலுக்கு மரியாதை, லவ் டுடே போன்ற நிறைய காதல் படங்களின் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
Also Read:தப்பான ரூட்டை போட்டுக் கொடுக்கும் விஜய்.. நல்ல தளபதியும் இல்ல, சரியான அரசியல்வாதியும் இல்ல