இசையமைப்பாளர் மிகச் சிறிய வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்தாலும் அவரது திறமையால் மிகப் பெரிய உயரத்திற்கு சென்று விட்டார். சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவரது கைவசம் தான் இருந்தது. நிற்க கூட நேரம் இல்லாத அளவுக்கு சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
இந்த சூழலில் திறமை இருக்கும் இடத்தில் குறும்புத்தனம் அதிகம் இருப்பது போல பல மன்மத லீலைகளை இசையமைப்பாளர் அரங்கேற்றி இருக்கிறார். அந்த வகையில் அவரின் லிஸ்டில் நடிகை, பாடகி, மேக்கப் ஆர்டிஸ்ட் என இடம்பெறாத பெண்களே இல்லாத அளவுக்கு இருக்கிறது. அந்த வகையில் தன்னுடன் மூத்த பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.
ஆனால் சில வருடங்களில் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதை இசையமைப்பாளர் நேரடியாகவே பல இடங்களில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து இசையமைப்பாளர் வலையில் நிறைய நடிகைகள் விழ ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் அவரது குடும்பம் இதை நினைத்து வருத்தப்பட்டாலும் நாளடைவில் இசையமைப்பாளர் பற்றி நன்றாக புரிந்து கொண்டனர். ஏனென்றால் யாருடனும் அவரால் நீண்ட நாட்கள் உறவில் இருக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது. ஆனால் இப்போது இசையமைப்பாளர் உடன் நெருங்கி ஒரு பாடகி பழகி வருகிறார்.
வெளியூர் கச்சேரிக்கு செல்லும்போது பாடகியை தவிர்க்காமல் அழைத்துச் செல்லும் இசையமைப்பாளர் அங்கு பிரபல ஹோட்டல் ஒன்றில் நடிகையை பாட வைத்து டேட்டிங் செய்து கொண்டிருக்கிறாராம். இந்த சம்பவம் தான் இப்போது கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.