செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரஜினிக்கு ஒரு நியாயம், விஜய்க்கு ஒரு நியாயமா.? தளபதி சர்ச்சையில் சிக்க இதுதான் காரணம்

Rajini and Vijay: தளபதி விஜய் என்றால் எப்போதுமே சர்ச்சை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ரஜினி இவ்வாறு செய்தால் அதிக சர்ச்சை வெடிக்காத நிலையில் விஜய்க்கு மட்டும் தொடர்ந்து குடைச்சல் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

அதோடுமட்டுமல்லாமல் ஆரம்ப காலங்களில் ரஜினி மிகுந்த சர்ச்சையான வார்த்தைகளை பேசியிருக்கிறார். மேலும் அவரது படத்திலும் சிகரெட், மது பழக்கம் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த சூழலில் ஜெயிலர் படத்தில் வெடிக்காத சர்ச்சை லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெறும் போது பிரச்சனையாக்கப்பட்டது.

மேலும் லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் போதும் அதில் விஜய் பேசியிருந்த கெட்ட வார்த்தை பூதாரமாக வெடித்தது. இந்நிலையில் ஒரு காலத்தில் ரஜினி இதுபோன்ற செய்யும்போது ரசிகர்கள் இதைப் பார்த்து கெட்டுப் போவதாக சர்ச்சை எழுந்து முடிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இது போன்ற அவர் நிறைய காட்சிகளில் நடித்துவிட்டார்.

Also read: இந்தியனுக்கு சாவே கிடையாது.. மிரட்டும் சேனாபதி, ரஜினி வெளியிட்ட இந்தியன் 2 வீடியோ எப்படி இருக்கு?

இப்போது உள்ள இளைய சமுதாயம் இளம் ஹீரோக்களின் செய்கைகளைப் பார்த்து அப்படியே பிரதிபலிக்கின்றனர். அதுவும் குறிப்பாக தளபதி விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் இது போன்று சர்ச்சை வெடிக்கிறது. மேலும் விஜய் சில காலம் இதுபோன்ற காட்சியில் நடித்தாலும் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவுடன் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

அதையும் மீறி லியோ படத்தில் இந்த காட்சி இடம்பெற்றது தான் சர்ச்சைக்கு வழி வகுத்தது. விஜய்யை பொறுத்தவரையில் சின்ன குழந்தைகள் முதல் வயதில் மூத்தவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யின் ஒவ்வொரு செய்கையும் குழந்தைகளை கண்டிப்பாக கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

ஆகையால் சூப்பர் ஸ்டார் ஒரு விஷயத்தை செய்யும் போது பிரச்சனை பெரிதாகாமல் விஜய் அந்த காரியத்தை செய்தால் பூதாகரமாக வெடித்து வருகிறது. இப்போது அவர் அரசியலுக்கு வருவதாலும் தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். கண்டிப்பாக அவற்றையெல்லாம் கடந்து விஜய் அரசியலிலும் சாதிப்பார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

Also read: லியோ முத்த சர்ச்சை.. மிஷ்கின் கொடுத்துள்ள விளக்கம்

Trending News