தல இருக்கும்போது வால் ஆடுனா இதுதான் நிலைமை.. தலைவர் 171இல் செக் வைத்த ரஜினி

Thalaivar 171: ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்திற்கு இப்போது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் லியோ படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும் அதில் உள்ள குறைகளை கண்டறிந்து கண்டிப்பாக தலைவர் 171 படத்தை பிரமாண்டமாக லோகேஷ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த படத்தில் ரஜினி ஒரு முக்கிய முடிவு ரஜினி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது லோகேஷை பொருத்தவரையில் தன்னுடைய முதல் படமான மாநகரம் தொடங்கி ஒரே குழு உடன் பணியாற்றி வருகிறார். லியோ படம் வரை இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. ஆனால் தலைவர் 171 சில மாற்றங்கள் இருக்க உள்ளது.

அதாவது லியோ குழுவில் இருந்த ரத்னகுமார் தலைவர் 171 லிருந்து தூக்கப்படுகிறார். இதற்கு காரணம் ரஜினி தான் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. அதாவது லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்பே ரஜினி இந்த படத்தை பார்த்து விட்டார். அப்போதே ரஜினிக்கு இந்த படம் பிடிக்கவில்லையாம்.

அந்த சமயத்தில் லியோ படத்தில் லோகேஷ் உடன் யார் யார் பணியாற்றி உள்ளனர் என்பது குறித்து விசாரித்திருக்கிறார். அதுவும் லியோ படத்தின் இரண்டாம் பாதி சுத்தமாக சரி இல்லாமல் போனதற்கு ரத்தினகுமார் தான் காரணம் என்பது அப்போதே ரஜினி கண்டுபிடித்து விட்டார். ஆகையால் தலைவர் 171 படத்தில் ரத்தினகுமார் வேண்டாம் என்று லோகேஷ் இடம் ரஜினி கூறிவிட்டாராம்.

இதனால் தான் ரத்தினகுமார் கடுப்பாகி லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய்க்கு ஜால்ரா அடிப்பது போல் பேசி இருந்தார். அதாவது ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காக்கா, பருந்து கதை கூறியிருந்தார். அதை விமர்சிக்கும் படியாக பருந்து எவ்வளவுதான் உயரம் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என ரத்தினகுமார் பேசி இருந்தார்.

தலையே சும்மா இருக்கும்போது வால் ஆடக்கூடாது, விஜய் இதைப் பற்றி பேசாமல் இருக்கும்போது ஒரு மிகப்பெரிய இடத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டாரை ரத்தினகுமார் கிண்டலடித்துள்ளார். இதுவே அவரது சினிமா கேரியருக்கு அவரே சூனியம் வைத்துக் கொண்டார் என சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். ரத்தினகுமாருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வருவது மிகவும் கடினம்தான்.