உச்ச நடிகர் நடத்தும் அந்த நிகழ்ச்சி தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. எப்போதுமே நடிகருக்கு இதன் மூலம் ஆதரவு குவிந்து வரும். ஆனால் இப்போது அவர் சேர்த்து வைத்த மொத்த பேரும் காலியாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய வாய் துடுக்குத்தனத்தால் வெளியேற்றப்பட்ட அந்த நடிகருக்கு ஆதரவாக இப்போது பல குரல்கள் ஓங்கி ஒலித்து வருகிறது. இது எல்லாமே பக்கா ஸ்கிரிப்ட் என்று சந்தேகப்பட்டு வரும் நிலையில் சில உள்குத்து சம்பவங்களும் நிகழ்ச்சியில் நடக்கிறதாம்.
அதாவது நிகழ்ச்சிக்கு எதற்கு வந்தோம் என்றே தெரியாமல் ஒரு ஜோடி முகம் சுளிக்கும் வகையில் நடந்து வருகின்றனர். அதில் பெரிய குடும்பத்து பெண்ணான அந்த பிரபலம் இப்போது ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளாகி வருகிறார். எப்படியாவது அவரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று ஒவ்வொருவரும் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்த அவருடைய குடும்பம் இப்போது நிகழ்ச்சிக்கு கத்தை கத்தையாக பணத்தை கொடுத்து அவரை காப்பாற்ற சொல்லி இருக்கிறார்களாம். அது மட்டுமல்லாமல் மகளுக்கு சில அறிவுரைகளையும் அவர்கள் அனுப்பி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது. அதனால்தான் கடந்த சில நாட்களாக அவர் அந்த ரவுடி கும்பலுடன் சேர்ந்து விட்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் சில முக்கிய ஆட்களை காப்பாற்றவும் சதிவலைகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சார்பாக கொடுக்கப்படும் பணம் தான். அதனாலேயே சேனல் தரப்பு எந்த அராஜகம் நடந்தாலும் கண்டும் காணாமல் இருக்கிறதாம். இப்படி அந்த நிகழ்ச்சியில் நடக்கும் அட்டூழியம் ஒவ்வொன்றும் பகீர் கிளப்பி வருகிறது.