ரெட் ஜெயண்ட்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் கமல், மணிரத்தினம்.. உதயநிதி தலையில் அரைத்த மிளகாய்

Actor Kamal: கமலஹாசனின் 234-வது படமான தக் லைஃப் தற்போது விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்குகிறார். தக் லைஃப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கிறார்கள்.

இந்த படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் மணிரத்தினத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் உள்ளிட்ட மூன்று முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு பணமே போடாமல் இரண்டு புத்திசாலிகள் சாமர்த்தியமாக காய் நகர்த்தி இருக்கின்றனர். இதில் உதயநிதியின் தலையில்தான் மிளகாய் அரைத்து விட்டனர். படத்தின் கதாநாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பேரும் தங்களுடைய பணத்தை படத்திற்காக முதலீடு செய்யவில்லை.

அதற்கு பதில் கமல் தன்னுடைய சம்பளத்தையும், மணிரத்தினம் அவருடைய சம்பளத்தையும் முதலீடாக போட்டு உள்ளார்கள். அதனால் படத்தின் முழு இன்வெஸ்ட்மெண்ட்டும் உதயநிதி தான் போட்டு இருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் இருந்து வரும் லாபத்தை மூன்று பேரும் பிரித்து எடுத்துக் கொள்வார்களாம். இப்படி ஒரு புத்திசாலித்தனமான செயலை கமலால் மட்டும் தான் செய்ய முடியும். இப்போது மணிரத்தினத்தையும் அவர் கூட்டு சேர்த்துக் கொண்டு பணமே போடாமல் படத்தை தயாரிக்கும் திறமையை காட்டி விட்டார்.

மேலும் கமலஹாசன் சமீப காலமாகவே இளம் நடிகர்களை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படங்களில் தான் பணத்தை முதலீடு செய்ய வேண்டும், அதை தவிர அவர் நடிக்கும் படத்தில் அவ்வளவு எளிதாக பணத்தை போட்டு விட மாட்டார்.