சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கமலால் 13 வருஷம் வாழ்ந்த பொண்டாட்டிக்கே பாதுகாப்பு இல்ல.. எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய பயில்வான்

Bayilvan Ranganathan Talk About Kamal: கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் தன்னுடைய 69வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களின் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் பயில்வான் ரங்கநாதன் மட்டும் தன்னுடைய பாணியில் கமலை வம்புக்கு இழுக்கும் வகையில் பேட்டி ஒன்றில், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து வெளிப்படையாக பேசி கொளுத்தி போட்டிருக்கிறார்.

தேவர்மகன் படத்தில் கௌதமி மற்றும் கமல் இருவரும் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. ஆனால் அந்தப் படத்தில் பிறகு இருவருக்கும் எந்த உறவும் இல்லை. பின்பு கௌதமிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்ட பிறகு சென்னையில் ஒரு பிடிமானம் வேண்டும் என்று கமலின் தயவுக் கேட்டார்.

கமலஹாசனும் கௌதமியின் சிகிச்சை உரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கமலஹாசன் மூலமாக கௌதமிக்கு நிறைய வருமானமும் வந்தது. கமல் நடிக்கும் படங்களுக்கு எல்லாம் உலக நாயகனுக்கு காஸ்ட்யூம் டிசைனராக கௌதமிக்கு சம்பளத்தை கொடுத்துக் கொண்டிருந்தார்.

Also read: 1979ல் தலைக்கால் புரியாமல் ஆடிய ரஜினி கமல்.. திருந்திய உலக நாயகன் அட்ராசிட்டி செய்த தலைவர்

பின்பு கௌதமியை படங்களில் நடிக்கவும் வைத்தார். இப்படி 13 வருடம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்தனர். முன்பு கமல் இரண்டு திருமணம் செய்து கொண்டார், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள விரும்பாததால் கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

ஆனால் திடீரென்று கௌதமி, மகளின் பாதுகாப்பை கருதி பிரிவதாக கமலை விட்டு பிரிந்தார். அதன் பிறகு கௌதமி பிஜேபி-யில் சேர்ந்து விட்டார். கமலஹாசனை விட்டு பிரிந்த பிறகு அவருக்கு ஒரு பாதுகாப்பு வளையம் வேண்டும்.

ஏனென்றால் கமலஹாசனை எதிர்த்து தமிழ்நாட்டில் வேறு எந்த சினிமாக்காரனாலும் பாதுகாப்பு கொடுத்திட முடியாது. அதனால் தான் நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பிஜேபி-யில் ஐக்கியமாகிவிட்டார் என்று சமீபத்திய பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாகப் பேசி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார்.

Also read: ரெட் ஜெயண்ட்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் கமல், மணிரத்தினம்.. உதயநிதி தலையில் அரைத்த மிளகாய்

- Advertisement -spot_img

Trending News