ரஜினியவே யோசிச்ச சன் பிக்சர்ஸ்.. லோகேஷை சும்மாவா விடுவாங்க?.

Sun Pictures: சினிமாவை பொறுத்தவரை டாப் நடிகர்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்தால் மட்டுமே திரையுலகில் நிற்க முடியும், அது யாராக இருந்தாலும் சரி. ஒரு கட்டத்தில் சன் பிக்சர்ஸ் ரஜினியவே யோசித்துதான் படம் எடுத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் தர்பார் படம் சரியா ஓடாததால் ரஜினியிடம் சன் பிக்சர்ஸ் பேரம் பேசியது. இதனால் தர்பார் படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 118 கோடியை தூக்கிக் கொடுத்த சன் பிக்சர்ஸ், அண்ணாத்த படத்திற்கு பாதி சம்பளத்தை தான் கொடுத்தனர்.

அண்ணாத்த படத்திற்காக ரஜினி வெறும் 68 கோடியை தான் சம்பளமாக வாங்கினார். இவ்வாறு ரஜினியவே ஹிட் கொடுப்பாரா மாட்டாரா என யோசித்து சம்பளத்தில் கை வைத்த சன் பிக்சர்ஸ் லோகேஷை சும்மாவா விடுவாங்க!. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் உடன் இன்னொரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171 படம் ஆனது லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. லியோ படத்திற்கு 55 கோடியை சம்பளமாக லோகேஷுக்கு கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், நிச்சயம் தலைவர் 171ல் அதைவிட கம்மியாக தான் சம்பளத்தை கொடுக்கத்தான் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஏனென்றால் லியோ படம் செகண்ட் ஆப் மொக்கையாக அமைந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூலை தட்டி தூக்கினாலும் சன் பிக்சர்ஸ்சை லோகேஷ் திருப்தி படுத்தவில்லை.

இதனால் அடுத்த படத்தில் லோகேஷின் சம்பளத்தை பாதியாக்கப் போகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு தர்பார் படத்திற்கு பிறகு என்ன நடந்ததோ, அதை தான் இப்போது லோகேஸுக்கும் சன் பிக்சர்ஸ் செய்யப் போகிறது. ரஜினிக்கே கரிசனை காட்டாத சன் பிக்சர்ஸ், லோகேஷுக்கு காட்டி விடமாட்டார்கள்.