ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சிவகார்த்திகேயன் இனி எந்திரிக்கவே கூடாது.. தனுஷ் போட்ட புதுக்கணக்கு

Dhanush – Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவை அஸ்திவாரம் போட்டு கொடுத்தது தனுஷ் தான். தொடர்ந்து பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்தார் ஆனால் காக்கி சட்டை படத்திற்கு பிறகு இவருடைய நட்புக்குள்ளும் ஒரு மிகப்பெரிய விரிசல் உண்டாகிவிட்டது. என்னதான் உள்ளுக்குள்ள எந்த பிரச்சனையும் எல்லை என சொன்னாலும், விஷயம் ஊரரறிந்த ஒன்று தான்.

சிவகார்த்திகேயனும் குறுகிய கால கட்டத்தில், தனக்கென ஒரு நட்பு வட்டாரத்தை சினிமாவுக்குள் ஏற்படுத்தி கொண்டார். இதன்மூலம் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக தன்னை வளர்த்து கொண்டார். வளர்ச்சி வரும் போது சோதனையும் சேர்ந்து வரும் என்றாகி விட்டது சிவகார்த்திகேயனின் நிலைமை.

சமீபத்தில் இமான் கொடுத்த பேட்டியால் சிவகார்த்திகேயன், இத்தனை வருடங்கள் சேர்த்து வைத்த மொத்த பெயரும் டேமேஜ் ஆகிவிட்டது. ஏற்கனவே இந்த விஷயத்தால் ஜாலியாக இருக்கும் தனுஷ் இந்த வாய்ப்பின் மூலம் இனி சிவகார்த்திகேயனை எழவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பிளான் பண்ணி விட்டார். இதற்காக அவர் கை வைத்திருப்பது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் தான்.

Also Read:ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை அவிழ்த்துவிட்ட தனுஷ்

அயலான் படம் ஏற்கனவே நான்கு வருடங்களுக்கு மேலாக ரிலீசுக்காக காத்திருக்கிறது. தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்திருந்த நிலையில், இமான் பிரச்சனை வெளியானதால் இந்த நேரத்தில் படத்தை விட வேண்டாம் என முடிவெடுத்து இருந்தார்கள். அதற்கு அடுத்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்று பார்த்தால் லால் சலாம் மற்றும் தங்கலான் பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு பெரிய அதிர்ஷ்டமாக லால் சலாம் மற்றும் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டது. அயலானை சோலோவாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்த சிவகார்த்திகேயனின் பிளானில் மொத்தமாக மண்ணை வாரி போட்டிருக்கிறார் தனுஷ்.

டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய வேண்டிய கேப்டன் மில்லர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தனுஷ் சொல்லியிருப்பதாக தெரிகிறது. கேப்டன் மில்லர் படத்தின் கதை அதிக அளவில் எதிர்பார்க்கப்படுவதால், அதோடு சேர்ந்து அயலான் ரிலீஸ் ஆனால் தடுமாறிவிடும் என்பது தனுஷின் பிளானாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் துணிந்து அயலான் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:எதிரிக்கு எதிரி நண்பராக கூட்டு சேர்ந்த ரஜினி.. தனுசை பழிவாங்க தலைவர் போட்ட பிளான்

Trending News