வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சந்திரமுகியை இப்படி தான் சோலி முடிச்சீங்க.. லாரன்ஸை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

Lawrence-Blue Sattai Maran: சமீபகாலமாக பெரிய நடிகர்களின் கைவசம் இவ்வளவு படங்கள் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் அந்த அளவுக்கு விஜய் சேதுபதியையே ஓவர்டேக் செய்துவிட்டு வருஷத்திற்கு 5 முதல் 7 படங்களாவது ராகவா லாரன்ஸ் படம் வெளியாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் சந்திரமுகி 2 படம் வெளியாகி இருந்தது. பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தனர். இதில் லாரன்ஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்திருந்த சந்திரமுகி முதல் பாகத்தின் பேரையும் சேர்த்து டேமேஜ் செய்துவிட்டனர் என்ற விமர்சனங்கள் எழந்தது. இந்த சூழலில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Also Read : லோகேஷ், நெல்சன் தான் எனக்கு தெய்வம் மாதிரி தெரியுறாங்க.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட லாரன்ஸ் மாஸ்டர்

தீபாவளி பண்டிகைக்காக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக லாரன்ஸ் திருவெற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் சந்திரமுகி 2 படம் வெளியான போதும் இதே போல் தான் வெற்றி பெற வேண்டும் என்று கோயிலுக்கு சென்று கும்பிட்டது நினைவுக்கு வந்துள்ளது என கிண்டலடித்து கமெண்ட் செய்திருக்கிறார். சந்திரமுகி படத்தின் சோலியை முடித்தது போல் இப்போது ஜிகர்தண்டாவா என வேடிக்கையாக ப்ளூ சட்டை மாறனின் கமெண்ட் இருக்கிறது.

லாரன்ஸை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

Blue-sattai-maran-lawernce
Blue-sattai-maran-lawernce

Also Read : ரஜினியிடமே வாலாட்டிய லாரன்ஸ்.. மொத்த நம்பிக்கையும் இழந்ததால் வெறுத்துப்போன சூப்பர் ஸ்டார்

Trending News