வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அட்டூழியம்.. ஒரே பாத்ரூமுக்குள் மாயா, ஐஷு செய்த வேலை

Biggboss 7: இந்த பிக்பாஸ் வீட்ல என்னதான் நடக்குது என்று ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு ஏதோ இந்த வீட்டுக்கு ஓனர் போல் ஒரு கும்பல் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை தற்போது டார்கெட் செய்து வரும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவர்களை கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதிலும் ஊருக்குத்தான் உபதேசம் எங்களுக்கு இல்லை என மாயா அணி செய்யும் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரே வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்னங்க சார் உங்க சட்டம் என கமலை எதிர்த்து கேள்வி கேட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் மாயா, ஐஷு இருவரும் மைக்கை கழட்டி விதியை மீறி இருக்கின்றனர்.

ஏற்கனவே இதை ஆண்டவர் ஒருமுறை கண்டித்திருக்கிறார். ஆனாலும் அடங்காத இந்த பெண்கள் அணி திரும்பத் திரும்ப அதே தவறை செய்து வருகின்றனர். அதில் தற்போது பிக் பாஸ் வீட்டின் நிலை அவர்களுக்கு பாதகமாக இருக்கிறது. அதனால் யாருக்கும் தெரியாமல் மாயா, ஐஷு ஒரே பாத்ரூமுக்குள் சென்று ரகசியம் பேசி சதி திட்டம் தீட்டுகின்றனர்.

Also read: அவமானத்தில் கூனி குறுகி வெளியேறும் போட்டியாளர்.. ட்விஸ்ட் வைக்கும் இந்த வார பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்ட்

மைக்கை கழட்டி விட்டு இவ்வாறு பேசுவது விதிமீறல் என்று தெரிந்தும் கூட இவர்கள் இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கின்றனர். பின்பு ஒன்றுமே தெரியாத பிள்ளைகள் போல் வேலையை பார்க்க சென்று விட்டனர். இந்த வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டின் தலைவரே இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறார். இதை நிச்சயம் கமல் தட்டி கேட்க வேண்டும். ஆனாலும் இந்த மாயா கோஷ்டி சாரி என்ற ஒற்றை வார்த்தையோடு அதை முடித்து விடுவார்கள். இதைப்பற்றி ஏற்கனவே பூர்ணிமா நக்கலாக கமெண்ட் கொடுத்திருந்தார். அதாவது எப்படியும் கமல் சார் நம்ம செய்ற வேலையை பற்றி கேட்பார்.

அப்போது சாரி சார் என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் என்று சிரித்தபடி கூறி இருந்தார். இதுவே பார்ப்பவர்களை எரிச்சல் மூட்டியது. இதில் இந்த அட்டகாசமும் வேறு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது கமலின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கும் நிலையில் நாளை அவர் இவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: பிக்பாஸ் வரலாற்றையே மாற்றிய அர்ச்சனா.. அள்ள அள்ள குறையாத ஓட்டு, மரண பீதியில் மாயா அண்ட் கோ

Trending News