வெளியிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்.. கடைசி நேர எவிக்சனில் நடந்த குளறுபடி

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே எதிர்பாராததை எதிர்பாரங்கள் என்று கமல் சொல்வதுண்டு. கடந்த வாரம் முழுக்க கமலஹாசனின் எபிசோடு பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவர் மாயா கூட்டணியை வெளுக்கவில்லை என பார்வையாளர்கள் ரொம்பவே குறைபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வீட்டில் நடந்த அத்தனை பிரச்சனைக்கும் மாயா தான் காரணம் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் டூத் பிரஷ் பற்றி மட்டும் கேள்வி கேட்டுவிட்டு மாயாவை எதுவுமே சொல்லவில்லை கமல். இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தும், பெரிய அளவில் சர்ச்சை கிளப்பிய விஷயங்கள் எதுவுமே நிகழ்ச்சியில் பேசப்படவில்லை. குறிப்பாக வினுஷா விவகாரமும் கூட.

நிக்சனை கமல் எந்த கேள்வியுமே கேட்கவில்லை, 18+ ஜோக்குகள் கண்டுகொள்ளப்படவில்லை இந்த வீகென்ட் எபிசோடுகளில். சரி, எது எப்படி போனாலும், வாக்கெடுப்பு என்பது மக்களால் நடக்கும் ஒன்று. இதனால், இது நியமாக இருக்கும், மக்கள் நினைத்தவர்கள் வெளியேற வேண்டும் என்றவர்களின் எண்ணத்தில் இடியை இறக்கிவிட்டார் பிக்பாஸ்.

கடந்த வாரம் நாமினேஷன் ஆனவர்களில் பூர்ணிமா தான் கடைசியில் இருந்தார். பூர்ணிமா இந்த வாரம் வெளியேறி விடுவார், மாயாவின் கொட்டத்தை அடக்கி விடலாம் என எல்லோருமே நினைத்தார்கள். சனிக்கிழமை வரைக்கும் பூர்ணிமா ஓட்டெடுப்பில் இறுதியில்தான் இருந்தார். ஆனால் இந்த வாரம் ஷோவை விட்டு வெளியேறியது ஐஷு தான்.

இந்த கடைசி நேர மாற்றத்திற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியில் இருந்து வந்த அழுத்தம் தான். ஐஷு ஆரம்பத்தில் இருந்த மாதிரி தற்போது போட்டியில் கவனம் செலுத்தவில்லை. நிக்சனுக்கும், அவருக்கும் இடையே நடக்கும் சில விஷயங்கள் பார்வையாளர்களால் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கிறது. ஐஷுவின் வீட்டில் இருந்து ஏற்கனவே அவரை வெளியே அனுப்பும்படி கோரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் முழுக்க ஐஷு மற்றும் நிக்சன் சார்ந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆகின. இனியும் அவர் உள்ளே இருந்தால் சரி இருக்காது என ஐஷு வீட்டில் அழுத்தமாக பிக் பாஸ் வீட்டில் பேசப்பட்டிருக்கிறது. போட்டியை தாண்டி பெற்றோர்களின் கவலையை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி தரப்பினர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →