வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

தமிழ் சினிமாவை கெடுத்து குட்டிச்சுவராக்கும் விஷயங்கள்.. உண்மையை போட்டுடைத்த சத்யராஜ்

Actor Sathyaraj: நடிகர் சத்யராஜ் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். ஹீரோ, வில்லன், சப்போர்ட்டிங் கேரக்டர், காமெடி என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. தமிழ் மொழி மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கும் இவர், தமிழ் சினிமா தோற்பதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறார்.

தமிழ் சினிமாவிற்கு ஆஸ்கர் விருது என்பது கனவாகவே இருக்கிறது. சத்யராஜ் சொல்லும் விஷயங்களை கவனித்துப் பார்த்தால், இந்த இரண்டு காரணங்கள் தான் இந்த விருது நம் கையை விட்டு போவதற்கும் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இதை தவிர்த்தால், கண்டிப்பாக நம்ம சினிமாவும் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே எப்போதுமே மசாலா படங்களுக்கு தான் அதிக வரவேற்பு இருக்கிறது. காதல், காமெடி, ஆக்சன் என மொத்தமும் ஒரு படத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதிலும் முன்னணி ஹீரோக்கள் என்றால் அவர்களுக்கு இன்ட்ரொடக்ஷன் பாட்டிலிருந்து, பஞ்ச் டயலாக்குகள் வரை எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Read:பெருந்தன்மையில தலைவரை விட அற்பமான உலக நாயகன்.. மொத்த படக் குழுவையும் கும்பிட செய்த ரஜினி

ஒரு படத்தில் காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் வைப்பது அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அந்த காட்சிக்காகவும், பாடல் வருவதற்காகவும் கண்டிப்பாக சீனில் லீடு கொடுக்க வேண்டும். இதற்காக லீடு கொடுப்பதால், கதையில் கருவையே கொஞ்சம் மாற்ற வேண்டியது வரும். இதனாலேயே கதைக்களம் திசை திருப்பப்படும்.

அதேபோன்றுதான் ஆக்சன் காட்சிகளும் படங்களில் திணிக்கப்படுகிறது. ஒருவர் 10 பேரை அடிப்பது , கார் பறந்து வருவது, துப்பாக்கியில் சுட்டாலும் ஹீரோ மட்டும் பிழைத்துக் கொள்வது என கதாநாயகனுக்கு பில்டப் கொடுக்கிறேன் என்ற பெயரில் காமெடி பண்ணிக் கொண்டிருப்பதால் தான், ஆக்சன் காட்சிகளும் எடுபடாமல் போகிறது.

கதை கருவை திசை திருப்பாமல், காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் திணிக்கப்படாமல் இருந்தாலே படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்துவிடும். இதை தான் சத்யராஜ், பாட்டு மற்றும் தேவை இல்லாத அதிரடி காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே தமிழ் சினிமா ஜெயித்து விடும் என சொல்லி இருக்கிறார்.

Also Read:அசைவ கறிக்கு அடிமையான 4 அக்ரஹார நடிகர்கள்.. எம்ஜிஆரை விட ஒரு படி மேலே போய் பொளந்து கட்டிய கமல்

- Advertisement -spot_img

Trending News