பீர் குடித்தே இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த விக்ரம் பட வில்லன்.. 6 வருடம் கழித்து வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்

Vikram Movie Villain Actor: தன்னுடைய தனிப்பட்ட திறமையால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல மலையாள நடிகர், தமிழிலும் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். 6 வருடத்திற்கு முன்பு திடீரென்று உயிரிழந்த இவரின் மரணத்தில் திடுக்கிடும் ரிப்போர்ட் வெளியாகி  திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன ஜெமினி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் நடிகர் கலாபவன் மணி. இவர் கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரமிடம் மிமிக்ரி செய்து கொண்டே ஒளிந்து மறைந்து அடிக்கும் காட்சி இன்றும் கண் முன் வந்து போகிறது. இவர் கடந்த 2016ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இரண்டு வருட விசாரணைக்கு பிறகு தற்போது குற்ற பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

இதில், தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததை நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கு முக்கிய காரணம் என்று கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னி ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கல்லீரல் செயலிழந்த நிலையில் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் நிறுத்தவில்லை.

அதிலும் கல்லீரல் செயலிழந்து இரத்த வாந்தி எடுத்த போதும் கலாபவன் குடிப்பதை தொடர்ந்து செய்து கொண்டிருந்ததால், அவரே தனது மரணத்தை தேடிக்கொண்டார். இறப்பதற்கு முன்பு கூட 13 பாட்டில் பீர் குடித்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

எப்பேர்பட்ட கலைஞர் கலாபவன் மணி! அவருக்கு இருந்த குடிப்பழக்கம்  அவரின் வாழ்க்கையே குடித்து விட்டது. ஒருவேளை இந்த குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கலாபவன் மணி சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக உச்ச நிலைக்கு சென்றிருக்கலாம். அப்பேர்ப்பட்ட திறமைசாலி குடிப்பழத்துக்கு அடிமையாகி மண்ணா போனது திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் வேதனையை அளிக்கிறது.