வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மாயாவின் கூட்டணியை அசைத்துப் பார்க்கும் நாமினேஷன்.. டேஞ்சர் சோனில் இருக்கும் 2 பேர்

BB7 Nomination: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த ஐஷு கடந்த வாரம் நாமினேஷன் ஆகி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பூர்ணிமா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது. பூர்ணிமா வெளியே போகவில்லை என்றாலும் அடுத்து சிக்காமலா இருப்பார் என்று ஆடியன்ஸ்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரம் தினேஷ் பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக தேர்வாகி இருக்கிறார். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் பேசிய சில விஷயங்கள் மாயா மற்றும் பூர்ணிமாவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. அதிலும் தினேஷ் கேப்டன்சியில் அவர்கள் இருவரையும் பாத்திரம் கழுவும் வேலையில் வைத்திருப்பது இரண்டு பேருக்குமே சுத்தமாக பிடிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் விசித்ரா, மணி, ரவீனா, பூர்ணிமா, சரவண விக்ரம், அக்ஷயா, ஆர் ஜே பிராவோ, கானா பாலா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆடியன்ஸ்கள் மொத்த பேரும் இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தது போல், பூர்ணிமா வசமாக சிக்கி இருக்கிறார்.

Also Read:மாயா கூட்டணிக்கு ஜால்ரா போட்ட பிக்பாஸ்.. தினேஷ் கேப்டன்சிக்கு வச்ச பெரிய செக்

மாயா, பிக் பாஸ் வீட்டிற்குள் சூழ்ச்சி செய்கிறார் என்று சொன்னாலும் அவர் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெறவில்லை. இதற்கு காரணம், மாயா மற்றவர்களை ஏவி விட்டுவிட்டு சைலன்டாக இருந்து கொள்வது தான். பூர்ணிமா வெளியேறிவிட்டால் மாயா தன்னுடைய விளையாட்டை கரெக்டாக விளையாடுவார் என்பது தான் எல்லோருடைய கருத்தாகவும் இருக்கிறது.

பிக் பாஸ் ஆடியன்ஸ்கள் பூர்ணிமா மீது பயங்கர வெறுப்பில் இருக்கிறார்கள். இதனால்தான் அவர் குறைவான ஓட்டுகளை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் அவரை விடவும் குறைவான ஓட்டை பெற்றுக் கொண்டிருப்பவர் சரவண விக்ரம் தான். என்னதான் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தாலும், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகு அது எல்லாம் அப்படியே கம்மியாகிவிட்டது.

சரவண விக்ரம் பிக் பாஸ் வீட்டிற்குள் எதுவுமே செய்யவில்லை. அவர் அந்த வீட்டிற்குள் இருக்கிறாரா என்பதே பல நேரம் தெரியவில்லை. இதில் கடந்த வாரம் மாயா கூட்டணியுடன் சேர்ந்து கொண்டு அவர் அடித்த கூத்து, கோர்ட் டாஸ்க்கில் மாயாவுக்கு சப்போர்ட் செய்த சொன்ன கருத்து இதையெல்லாம் பார்க்கும் பொழுது சரவணன் விக்ரம் இந்த வாரம் தேடுவது ரொம்பவும் கஷ்டம் என தெரிகிறது.

Also Read:இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. செம போரிங் கண்டெஸ்ட்டை துரத்த போட்ட பிளான்

Trending News