சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

இங்கயேன் ஷூட்டிங் வச்சோம்னு பரிதவிப்பில் விஜய்- வெங்கட் பிரபு?. சோகமா ஏர்போர்ட் வந்த தளபதி

Vijay-Venkat Prabhu: லியோ படத்தை முடித்த கையோடு விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கிறார் இவருடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் நடைபெற்றது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் 15 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து தலைநகரம் பாங்காங்கில் நடத்த பட குழுவினர் திட்டமிட்டனர்.

இதற்காக விஜய்யும் கடந்து 2ம் தேதி கிளம்பி தாய்லாந்து சென்றார். இப்படிப்பட்ட சூழலில் தான் இங்கு ஏன் சூட்டிங் வைத்தோம் என்று விஜய் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் பரிதவிக்கின்றனர். ஏனென்றால் தாய்லாந்து கவர்மெண்ட் எதற்குமே பர்மிஷன் கொடுக்க மாட்டேங்கிறாங்க.

Also Read: விஜய்க்கு அஜித் சப்போர்ட் கண்டிப்பாக வேணும்.. சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர்!

ஏனென்றால் தாய்லாந்து நாட்டில் கார் சேசிங், கார் ப்ளாஸ்ட் போன்றவற்றை எல்லாம் செய்வதற்கு தாய்லாந்தில் சில விதிமுறைகளும் வரம்புகளும் இருக்கிறது. அதனால் தான் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்கு தாய்லாந்து அரசு தடை விதித்துள்ளனர். இப்போது மொத்தப் படக் குழுவும் தாய்லாந்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிக்கின்றனர்.

தளபதி 68 படத்தில் இடம்பெறும் முக்கிய ஆக்சன் காட்சிகளை எடுப்பதற்கு அரசிடம் பலமுறை அனுமதி கோரிய போதும், தாய்லாந்து அரசாங்கம் கதவை மூடிவிட்டது. ‘நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது’ ஏற்கனவே விஜய், தேர்தலை முன்னிட்டு 2024 மே மாதத்திற்குள் தளபதி 68 படத்தை முடிக்க திட்டமிட்டார்.

ஆனால் இப்போது தாய்லாந்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் திடீரென்று தளபதி விஜய் சென்னை திரும்பி உள்ளார். விமான நிலையத்திலிருந்து விஜய் வெளியே வரும் காட்சிகளில் அவருடைய முகம் சோகமாக இருந்தது. தாய்லாந்தில் தடைபட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே மீண்டும் துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Also Read: லியோவால் லோகி எடுத்த அதிரடி முடிவு.. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது

Trending News