திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யை நம்பி ஓவர் ஆட்டம் போட்ட லலித்.. எதிரியிடமே தஞ்சம் அடைந்த கொடுமை

Producer Lalit Kumar: நடிகர் விஜய் படங்களை தொடர்ந்து தயாரித்ததன் மூலம் மக்களிடையே பரீட்சையமானவர் தான் தயாரிப்பாளர் லலித். புகழ் வரும்பொழுது கொஞ்சம் தன்னடக்கமும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் லலித் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் போட்டு விட்டார். இதனால் தற்போது இவருடைய நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.

2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மாஸ்டர் படத்தை தயாரித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது லலித்தின் 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம். அதன் பின்னர் விஜய்யின் வாரிசு படத்தை தமிழ்நாடு முழுக்க விநியோகிக்கும் உரிமையை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து தான் விஜய்யின் லியோ படத்தை தயாரிக்கும் வாய்ப்பு லலித்திற்கு கொடுக்கப்பட்டது.

Also Read:வாய்ப்பு கொடுத்தவருக்கே டிமிக்கி கொடுக்கும் விக்கி.. உன் சங்காத்தமே வேண்டான்னு கும்பிடு போட்ட ஆண்டவர்

லியோ படத்தின் போது லலித் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தார். திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிக ஷேர் கேட்டதால் படம் ரிலீஸ் ஆகுமா என்ற பெரிய சந்தேகமே கடைசி நேரம் வரை இருந்தது. அதேபோல் பொய்யான வசூல் விவரங்களை கொடுக்கிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக லலித் பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

லியோ படத்திற்கு பிறகு லலித்திற்கு எந்த படங்களும் அமையவில்லை. அதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைய இருக்கிறார். விக்கி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை லலித் தான் தயாரித்திருந்தார். அந்த சமயத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பேச்சுவார்த்தை கூட இல்லை என்று தான் சொல்லப்பட்டது.

பட வாய்ப்புகள் இல்லாததால் எதிரியாய் இருந்தாலும் பரவாயில்லை என விக்னேஷ் சிவனிடம் தஞ்சமடைந்துவிட்டார். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் தான் கதாநாயகன். விக்கி மற்றும் பிரதீப் கூட்டணியில் தொடங்கப் போகும் படத்தை கமலஹாசன் தான் தயாரிப்பதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களால் இந்த ப்ராஜெக்ட் கை மாறி இருப்பதாக தெரிகிறது.

Also Read:எல்லாத்துக்குமே பலிக்கிடாவா மாறிய விக்னேஷ் சிவன்.. அடுத்த ஆடு கிடைக்காமல் நொந்து நூடுல்ஸான இயக்குனர்

Trending News