அர்த்த ராத்திரில கதவை தட்டுவாங்க.. பார்க்கக் கூடாததை எல்லாம் பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விரும்பாத இல்லத்தரசிகளே இருக்க முடியாது. அதனாலயே இப்போது அதன் அடுத்த சீசனும் கோலாகலமாக தொடங்கி வரவேற்பை பெற்று வருகிறது.

அதில் குழலி என்னும் கேரக்டரில் நடிக்கும் ஆர் ஜே ஹாசினி தன் வாழ்க்கையின் நடந்த சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில் இவருடைய திருமண வாழ்க்கை கஷ்டங்களும், சோகங்களும் நிறைந்ததாக இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவருடைய கணவர் தான்.

பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த அவர் சில மோசடி வேலையிலும் ஈடுபட்டு இருக்கிறார். இவை அனைத்தும் திருமணத்திற்கு பின்பு தான் ஹாசினிக்கு தெரிய வந்திருக்கிறது. இருந்தாலும் அவர் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இதுவே அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்து இருக்கிறது.

ஏனென்றால் நடு ராத்திரி 2 மணிக்கு எல்லாம் தெரியாதவர்கள் வீட்டு கதவை தட்டி உங்கள் கணவருக்கு பிரச்சனை என்று சொல்வார்களாம். இப்படி ஒன்று முடிவதற்குள் அடுத்த பிரச்சனை வந்துவிடுமாம். தன்னுடைய 29 வயதில் பார்க்க கூடாத அனைத்தையும் பார்த்து விட்டதாக அவர் வேதனையுடன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனால் உச்சகட்ட மன அழுத்தத்திற்கு சென்ற அவர் ஒரு கட்டத்தில் தன் கணவர்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்பதை உணர்ந்து இருக்கிறார். அதன் பிறகே திருமண வாழ்க்கையை விட்டு அவர் வெளியில் வந்திருக்கிறார். அதை தொடர்ந்து பல சங்கடங்களை சந்தித்த அவர் இப்போது நடிப்பு பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் ஏற்கனவே விஜய் டிவி சீரியல்களில் பிரபலமானவர்கள் தான். அது மட்டுமல்லாமல் இவருடைய குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி பிரபலமாக இருக்கும் இவருக்கு இப்படி ஒரு கஷ்டம் இருப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.