புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஒரே கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்கும் தனுஷ்.. மாமனார், பொண்டாட்டியை காலி செய்யும் மாஸ்டர் பிளான்

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் பட்டப்படிப்பு ஒருபக்கம் இருக்க, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ரிலீசுக்காக மறுபக்கம் தனுஷ் காத்துக் கொண்டிருக்கிறார். வரும் டிசம்பர் மாதம் இப்படம் ரிலீசாக உள்ளதால் ரசிகர்களும் இப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், தீபாவளிக்கே கேப்டன் மில்லர் படத்தை ரிலீஸ் செய்திருக்கலாம். எதற்காக டிசம்பர் மாதம் வரை இழுத்து இப்படத்தை ரிலீஸ் செய்கிறீர்கள் என படக்குழுவிடம் பலரும் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகளுக்கான பதில் தற்போது வந்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Also Read: சிவகார்த்திகேயன் இனி எந்திரிக்கவே கூடாது.. தனுஷ் போட்ட புதுக்கணக்கு

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் ஸலாம் படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலன்று ரிலீசாக உள்ள நிலையில், இப்படத்திற்கு போட்டியாக அரண்மனை 4, அயலான் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே லால் ஸலாம் படத்தின் வசூலை முறியடிக்கவே நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் தனது முன்னாள் மனைவி மற்றும் மாமனாரை பழி வாங்க இதுவே சரியான நேரம் என நினைத்து தனுஷ் தற்போது இப்படி ஒரு வேலையை செய்து வருகிறாராம்.

Also Read: போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் மீது செம காண்டில் உள்ளாராம். தன் மகளின் வாழ்க்கையை வீணடித்த தனுஷை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என ரஜினிகாந்த் கங்கணம் கட்டி வருகிறாராம். இதையறிந்த தனுஷ் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா போல கேப்டன் மில்லர் படத்தின் மூலமாக இருவரையும் ஒரே சமயத்தில் பழி வாங்க திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை மையமாக வைத்து கேப்டன் மில்லர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள நிலையில், படம் நன்றாக இருந்தால் பொங்கலை தொடர்ந்தும் திரையில் காட்சிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அதன்படி பொங்கலன்று ரிலீசாகும் லால் ஸலாம் படம் எப்படி இருக்கும் என்பதை பொருத்து இப்படத்தின் வசூலை கேப்டன் மில்லர் படம் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாம்.

Also Read: தனுஷ் கைவசம் இருக்கும் 11 படங்கள்.. இசைஞானியாக அவதாரம் எடுக்கும் அசுரன்

Trending News