Actor Santhanam Net Worth: சின்னத்திரையில் விஜய் டிவியின் லொள்ளு சபாவின் மூலம் புகழ்பெற்ற சந்தானத்தின் சொத்து மதிப்பு பல முன்னணி நடிகர்களின்வாயை பிளக்க வைக்கும் படி அமைந்துள்ளது. நண்பேண்டா என்ற ஒற்றை வார்த்தையை சிறிசு முதல் பெரிசு வரை உச்சரிக்க வைத்த சந்தானம் 2004ல் சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். சந்தானம் இந்த அளவு சினிமாவில் வளர்வதற்கு ஒரு படியை ஏற்படுத்தியவர் சிம்பு தான். ஆனால் இன்று சம்பாத்தியத்தில் அவரையே ஓரம் கட்டி விட்டார்.
தொடர்ந்து சச்சின், பொல்லாதவன் படங்களின் மூலம் தனக்கென ஒரு காமெடி டிராக்கை உருவாக்கி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். ஷங்கரின் ‘அறை எண் 305ல் கடவுள்’ என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் ஹீரோ இமேஜ்க்குள் இடம் பிடித்தார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ராஜா ராணி, எந்திரன், அரண்மனை என்ற படங்களின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.
இவரின் காமெடிக்காகவே படங்கள் வசூலில் சாதனை செய்தது. சந்தானமும் படத்திற்கு படம் தனது சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நகைச்சுவை டிராக்கில் இருந்து விலகி ஹீரோவாக மாறினார். தனது சம்பளத்தை 15 முதல் 20 கோடியாக உயர்த்தினார். ‘ஹேண்ட் மேட்’ பிலிம்ஸ் என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம்; வணிக ரீதியாக வெற்றியடைந்தது.
இதனை தொடர்ந்து இனி துணை வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லை. முன்னணி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார். தனக்கே உரித்தான இயல்பான நடிப்பின் மூலமும் கவுண்டர் காமெடி மூலமும் ‘தில்லுக்கு துட்டு’, பாகம் 1, பாகம் 2 போன்ற படங்களை உருவாக்கிய சந்தானத்தின் சென்ற ஆண்டு வெளியான டிடி ரிடன்ஸ் முதல் நாள் வசூல் மட்டுமே 2.3 கோடி தொடர்ந்து ஏறு முகமாக இருந்த இப்படம் வசூலில் 100 கோடியைத் தாண்டி சாதனை செய்த சந்தானத்தின் முதல் படமாக அமைந்தது.
பழைய பார்மூலா
காமெடி + திரில்லர் = சக்சஸ் என்ற பழைய பார்மூலாவை வைத்து கோடிகளை அள்ளிக் குவிக்கும் சந்தானத்தின் சொத்து மதிப்பு 98 கோடிக்கும் மேல். இவை தவிர திரைத்துறையைத் தாண்டி பல துறைகளிலும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். அடுத்த ஆண்டு சந்தானத்தின் சொத்து மதிப்பு 150 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தானம் தனது அடுத்த படமான 80’S என்ற படத்தின் First Look ஐ வெளியிட்டுள்ளார். 2024ல் இது திரைக்கு வர உள்ளது. இதைத் தவிர வடக்குப்பட்டி ராமசாமி என்ற படமும் அடுத்த வருடம் வெளிவர உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடித்துக் கூறி வெற்றியை நோக்கி அவர் பயணம் உள்ளது.