சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நீ அந்தப் பக்கமே தல காட்டக் கூடாது, திசை திருப்பிய விக்கி.. பயங்கர தோல்வி, புலம்பி தவிக்கும் நயன்

Nayanthara – Vignesh Sivan: நடிகை நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. தென்னிந்திய ஹீரோக்கள் அடுத்தடுத்து படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டாலும், நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. அதிலும் தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் படங்களில் த்ரிஷாவை புக் செய்தது நயன்தாராவுக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வாய்ப்பு கொடுக்காத அவர்களின் முகத்தில் பாலிவுட் படத்தில் ஜெயித்து வரியை பூச வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் பிளான். அந்த பிளானுக்கு ஏற்றவாறு ஜவான் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்போது நயன்தாராவின் கைவசம் இரண்டு பாலிவுட் படங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகும்.

நயன்தாராவின் பாலிவுட் பிரவேசத்துக்கு இடைஞ்சலாக இருப்பதே விக்னேஷ் சிவன் தான். நயன் ஆரம்ப காலங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தாலும், அடுத்தடுத்து தனக்கான கேரக்டர்களில் கண்ணியமாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பாலிவுட் படம் என்று வந்ததும் ஜவான் படத்தில் கொஞ்சம் கிளாமர் காட்ட ஆரம்பித்து விட்டார். அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்பு வந்தால் இது எல்லை மீறும் என விக்னேஷ் சிவனுக்கு பயம் வந்துவிட்டது.

Also Read:இந்த 2 நடிகர்களை நடிக்க வச்சா தான் உனக்கு துட்டு.. விக்னேஷ் சிவனுக்கு செக் வைத்த லலித்

நயன்தாராவை நடிப்பிலிருந்து திசை திருப்ப விக்னேஷ் சிவன் போட்ட பிளான் தான் இந்த பிசினஸ் எல்லாம். 9 ஸ்கின் என்னும் பெயரில் அழகு சாதன பொருட்களை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் தொடங்கினார்கள். அதை தொடர்ந்து டிவைன் ஃபுட்ஸ், பெமி 9 நாப்கின் என தன்னுடைய தொழிலை விரிவுபடுத்தி நயன்தாராவிற்கு ஆசையை காட்டினார் விக்கி.

ஆனால் இந்த பிசினஸ் எதுவுமே இன்னும் சூடு பிடிக்கவில்லை சம்பாதித்த பணத்தை எல்லாம் தொழிலில் முதலீடு செய்தும் எதிர்பார்த்த லாபம் இன்னும் கைக்கு எட்டாததால் நயன்தாரா பயங்கர அப்செட்டில் இருக்கிறார். தொழில் கை கொடுக்க விட்டால் மீண்டும் பாலிவுட் கனவை ஆரம்பித்து விடுவாரோ என்ற அச்சத்தில் விக்கி இருக்கிறார்.

நடிகை நயன்தாராவுக்கு இப்போதைக்கு அன்னபூரணி என்ற தமிழ் படம் கைவசம் இருக்கிறது. அதை தொடர்ந்து கமலஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக தொழில் ஆரம்பித்து தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கிறார்.

Also Read:வாய்ப்பு கொடுத்தவருக்கே டிமிக்கி கொடுக்கும் விக்கி.. உன் சங்காத்தமே வேண்டான்னு கும்பிடு போட்ட ஆண்டவர்

Trending News