புதன்கிழமை, நவம்பர் 27, 2024

ஜவான் வசூலை நெருங்க முடியாமல் திணறும் டைகர் 3.. 6-வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Tiger 3 Collection Report: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடிப்பில் டைகர் 3 வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் முதல் சில நாட்களில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. ஆனால் அடுத்தடுத்த தினங்களில் கலெக்ஷன் கொஞ்சம் மந்தமாக தான் இருக்கிறது.

அந்த வகையில் இதன் ஆறு நாள் வசூல் நிலவரத்தை பற்றி இங்கு காண்போம். முதல் நாளிலேயே இப்படம் உலக அளவில் 93.23 கோடிகளை தட்டி தூக்கி இருந்தது. அதை அடுத்து இரண்டாவது நாளில் 88.16 கோடிகளை வசூலித்திருந்தது. அதே போன்று மூன்றாவது நாளில் 67.34 கோடிகள் வசூல் ஆனது.

ஆனால் நான்காவது நாளை பொருத்தவரையில் வசூல் அப்படியே பாதியாக குறைந்தது. அதன்படி நான்காவது நாளில் 31 மற்றும் ஐந்தாவது நாளில் 29 கோடிகளும் தான் வசூல் ஆனது. இது படகுழுவினர் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றம் ஆக தான் இருந்தது.

Also read: மூச்சி இருக்கிற வர விஸ்வாசம் அழியாது, தோல்வி என்பதே டைகருக்கு கிடையாது.. சல்மான் கான் அதிரடியில் டைகர் 3 ட்ரெய்லர்

ஏனென்றால் சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் பாக்ஸ் ஆபிஸையே மிரட்டியது. அதேபோன்று டைகர் 3 யும் ஆயிரம் கோடியை நெருங்கிவிடும் என கருத்து கணிப்புகள் வெளியானது. ஆனால் தற்போது ஆறாவது நாள் வசூல் வெறும் 22 கோடியாக தான் இருக்கிறது.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி சென்றிருக்கும் டைகர் 3, 500 கோடியை தொடுவதற்கே திணறிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஆறு நாள் முடிவில் இப்படம் 334 கோடிகளை தான் வசூலித்திருக்கிறது. இருந்தாலும் வார இறுதியில் ஓரளவுக்கு கலெக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சல்மான் கானின் டைகர் 3 எப்படி இருக்கு.? ப்ளூ சட்டையின் விமர்சனம்

- Advertisement -spot_img

Trending News