வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சாவு வீட்ட டாவு வீடா ஆக்கிட்டானே எமதர்மா.. சந்தானத்தின் அலப்பறையில் 80ஸ் பில்டப் ட்ரைலர்

80s Buildup Trailer: தோல்விகள் கண்டாலும் துவண்டு போகாத சிங்கம் தான் சந்தானம். ஹீரோவாக உருவெடுத்த பிறகு இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஒரு சில படங்கள் தான் இவருக்கு வெற்றியை கொடுக்கிறது. அதில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து இவர் தற்போது ஞானவேல் ராஜா இயக்கத்தில் 80ஸ் பில்டப் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினாக வந்த ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சுந்தர்ராஜன், மொட்ட ராஜேந்திரன், கே எஸ் ரவிக்குமார், ஆனந்த் ராஜ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Also read: சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் ஆரம்பத்திலேயே சந்தானம் கமலின் தீவிர ரசிகராக இருப்பது போல் காட்டப்படுகிறது. அதை தொடர்ந்து அவருடைய தாத்தா மேஜர் சுந்தர்ராஜன் இறந்து போகிறார். அதை வைத்து தான் ட்ரைலர் மொத்தமும் நகர்கிறது.

சாவு வீட்டிற்கு வரும் ஹீரோயின் உடன் சந்தானம் டூயட் பாடுவதில் ஆரம்பித்த அலப்பறை ட்ரைலர் முழுவதும் தெரிகிறது. அதிலும் கே எஸ் ரவிக்குமார் சுந்தர்ராஜன் உயிரை எடுத்துச் செல்ல படும் பாடு, பெண் வேடத்தில் வரும் ஆனந்த்ராஜ் என ஒவ்வொரு காட்சியும் நல்ல காமெடி.

Also read: கமல் ரஜினிக்காக அடித்துக் கொள்ளும் சந்தானம்.. 80ஸ் பில்டப் அலப்பறையான டீசர்

இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரைலர் பயங்கர எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் வரும் 24ம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்க வரும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Trending News