ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

உசுர கொடுத்து நடிச்சும் பிரயோஜனம் இல்ல.. கடுப்பில் நடிகை எடுத்த முடிவு

நடிப்பு அரக்கி என்று சொல்லும் அளவுக்கு சவாலான கேரக்டர்களை தேடி தேடி நடிப்பவர் தான் அந்த நடிகை. அதேபோன்று கதாபாத்திரத்திற்காக அப்படியே உருமாறி நடிக்கும் திறமையும் அவருக்கு உண்டு. ஆனால் இப்படி நடித்தும் பிரயோஜனம் இல்லாத நிலையில் தான் நடிகை இருக்கிறார்.

சமீபத்தில் அவர் மிகவும் எதிர்பார்த்த இரண்டு படங்கள் படு தோல்வியை தழுவியது. அதிலும் நடிகை மெனக்கெட்டு நடித்ததெல்லாம் வீணாப்போன நிலையில் அது கழுவி ஊற்றப்பட்டது. இதுவே நடிகைக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்து விட்டதாம்.

உடம்பை வருத்திக்கொண்டு இனிமேல் எதற்கு நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டாராம். அது மட்டுமல்லாமல் சும்மா டூயட் பாடுவது, கிளாமர் ரோல் என தேர்ந்தெடுத்து நடிக்கும் முடிவிலும் அவர் இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது. அந்த அளவுக்கு அவர் நொந்து நூடுல்ஸ் ஆகி போயிருக்கிறார்.

Also read: அட்ஜெஸ்ட்மென்ட் டீலில் கொடி கட்டி பறந்த சிரிப்பு நடிகை.. விஷயம் தெரிஞ்சு கழட்டி விட்ட ஹீரோ

இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது இப்போது ஆன்ட்டி நடிகைகள் கூட கிளாமர் பக்கம் களமிறங்கி ஸ்கோர் செய்து வருகின்றனர். அதனாலேயே நடிகை இப்போது இந்த ரூட்டை பிடித்து கல்லாகட்ட முடிவு செய்து இருக்கிறார். இந்த விரக்திஅவரை குடிபோதைக்கும் அடிமையாக்கி விட்டதாம்.

நடிகையின் இந்த நிலையை பார்த்த பலரும் எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என பரிதாபப்பட்டு வருகின்றனர். தற்போது பல கதைகளை கேட்டு வரும் இந்த நடிகையின் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது திரையுலக வட்டாரம்.

Also read: கிரிக்கெட் வீரரை நம்பி ஏமாந்த நடிகை.. கடைசி வரை நிற்கதியாக நிற்கும் கொடுமை

Trending News