ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எம்ஆர் ராதா-வை தண்டிக்க வந்த நீதிபதியே கட்டிப்பிடித்து பாராட்டிய சம்பவம்.. அதுக்குன்னு இப்படியா அசிங்கப்படுத்துவது.?

Actor MR Radha: மேடை நாடக நடிகரான எம்ஆர் ராதா, தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராக கலக்கியவர். இவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவருக்கு ‘நடிகவேள்’ என்ற பட்டத்தை கொடுத்தனர். அப்படிப்பட்டவரை இப்படியா அசிங்கப்படுத்துவது என நினைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது எம்ஆர் ராதா ‘விமலா விதவையின் கண்ணீர்’ என்ற ஒரு நாடகத்தை நடத்தினார். அதில் உடன்கட்டை ஏறுதல், பெண்களுக்கு மொட்டை அடித்து அசிங்கப்படுத்துவது என, இதுபோன்ற விஷயங்களுக்கு எல்லாம் அந்த நாடகத்தில் எம்ஆர் ராதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஏனென்றால் பெண் அடிமைத்தனம் அப்போது தலைவிரித்து ஆடியது. அந்த சமயத்தில் எம்ஆர் ராதா, இப்படி ஒரு நாடகத்தை நடத்தியதால் மொத்த நாடும் எதிர்ப்பு தெரிவித்து நீதி வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கணேஷ் ஐயர் எம்ஆர் ராதா நடத்திய ‘விமலா விதவையின் கண்ணீர்’ என்ற நாடகத்தை பார்க்க வந்தார்.

Also Read: ஜிகர்தண்டா டபுள் X படத்திற்கு பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. வசூல் விவரத்துடன் வெளியான ரிப்போர்ட்

அந்த நாடகத்தை பார்த்ததும் அவர் எம்ஆர் ராதாவை கட்டிப்பிடித்து பாராட்டி சென்றார். அதன் பின் எம்ஆர் ராதாவிற்கு ஒரு அரண் போல் அவர் காப்பாற்றி வந்தார். அப்படிப்பட்ட நடிகர் எம்ஆர் ராதாவை இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எஸ்ஜே சூர்யாவுடன் பேசி அசிங்கப்படுத்தி விட்டார்.

சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த பிறகு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டிய நிலையில், ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் தான் எஸ்ஜே சூர்யா தமிழ் திரையுலகில் ‘அடுத்த நடிகவேள்’ எஸ்ஜே சூர்யா தான் என்று பாராட்டி இருக்கிறார். எம்ஆர் ராதாவை போல் இவரும் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி வருவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

Also Read: எஸ்ஜே சூரியாவின் ட்ராக்கை மாற்றிய இயக்குனர்.. பிரஸ் மீட்டில் ஓப்பனாக பேசிய நடிப்பு அரக்கன்

Trending News