Actor Vijay Is Helping Mind: சினிமாவில் பாக்ஸ் ஆபிஸை பொளந்து கட்டிக் கொண்டிருக்கும் விஜய் அரசியலிலும் குதிக்க எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறார். ஆனா சொந்த காசுல எவனாவது அரசியல் பண்ணுவானா என்பது தான் இப்போது தளபதியின் கொள்கையாக இருக்கிறது.
படங்களில் நடித்து தற்போது வரை விஜய் சேர்த்து வைத்திருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டும் 420 கோடி. அதை கொஞ்சம் கூட கரைத்து விடக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். ஆனால் விஜய்யின் ஆரம்ப கால கட்டத்தில் அவருடைய பெயரை சொல்லி ரசிகர்கள் தான் தங்களது சொந்த காசை போட்டு உதவி செய்து வந்தனர்.
இதற்கெல்லாம் விஜய் ஒரு ரூபா கூட ஒதுக்கல, ஆனா நல்ல பெயரை மட்டும் வாங்கி ஜோப்பில் போட்டுக் கொண்டார். ஆனா இப்போது விஜய் அரசியலுக்கு வருகிறார், நிறைய உதவி பண்ண ஆரம்பித்துவிட்டார். இதே போல் புஸ்ஸி ஆனந்தும் விஜய் சொல்றத செய்ங்க என்று ரசிகர்களுக்கு ஆர்டர் போடுகிறார்.
சொந்த பணத்தை கொடுக்காமல் உதவி செய்யும் விஜய்
ஆனால் இப்போது வரை அவர்களுக்கு விஜய் ஒரு ரூபாய் துட்டு கூட பணம் கொடுக்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி கட்சி ஆரம்பிக்க முடியும், இன்னும் விஜய் மக்களை பார்க்க வரவில்லை. ஏர்போர்ட்டுக்கு வந்தால் கூட மக்களை பார்க்காமல் யாருக்கும் தெரியாமல் ஓடிவிடுகிறார்.
தளபதி ரசிகர்கள் தான் பாவம். விஜய் ஃபண்டு கொடுத்தால் தான் அரசியலில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு நாள் தான் ரசிகர்களை தங்களது கை காசை போட்டு செலவு பண்ணுவார்கள். இதை யோசித்து விஜய் செயல்பட வேண்டும் என்பது மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆதங்கம்.