நட்பை புதுப்பித்து கூட்டணி அமைத்த கௌதம் வாசுதேவ் மேனன்.. 2 ஆம் பாகங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Gautham vasudev menon upcoming movies: காதலை ஸ்டைலிஷ் ஆகவும், காலத்திற்கு தக்கவாறு வெளிப்படுத்தும் வண்ணம் தன் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் வல்லவர் கௌதம் வாசுதேவ் மேனன் .லவ், ஆக்ஷன், திரில்லர் இந்த மூன்றையும் கரெக்டான காம்பினேஷனில் கலந்து கொடுப்பதில் எக்ஸ்பர்ட் ஆன கௌதம், மின்னலே தொடங்கி வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என்னை அறிந்தால் போன்ற படங்களை இயக்கியும் விடுதலை,லியோ போன்ற பல படங்களில்  நடிக்கவும் செய்தார்.

தற்போது இயக்க வேலைகளில்  மட்டுமே பணியாற்றப் போவதாகவும் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். பல சோதனைகளுக்கு ஆட்பட்டு  கொண்டிருந்த கௌதமின்  துருவ நட்சத்திரம் நட்சத்திரம் திரைக்கு வர இருக்கும்நிலையில், விக்ரம் கௌதமிடம்  துருவ நட்சத்திரம் பாகம் 2 ல் அவரே நடிப்பதாக வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

Also Read: கௌதம் வாசுதேவ் மேனன் தலையில் டக்குன்னு எரிஞ்ச பல்பு .. வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூர்யா கூட்டணியில் வெளிவந்த காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் இரு படங்களுமே அதிக நாட்கள் ஓடிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாகும். துருவ நட்சத்திரத்தில் சூர்யா மற்றும் கௌதமிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் இவரின் இயக்கத்தில் சூர்யா இணைவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சமீபத்தில் இருவரும் சமாதானமாகி வாரணம் ஆயிரம் 2 படத்திற்கு சூர்யா ஓகே சொல்லிவிட்டார்.

என்ன ஒன்று சூர்யாவின் கைவசம் பல படங்கள் இருப்பதால் வாரணம் ஆயிரம் 2 கொஞ்சம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல எதிர்மறையான விமர்சனங்களை கடந்து துருவ நட்சத்திரத்தில் கௌதம் ஜொலிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.துருவ நட்சத்திரம்  வெற்றிக்கு பின் துருவ நட்சத்திரம் 2, வாரணம் ஆயிரம் 2,  வேட்டையாடு விளையாடு 2 போன்ற பல படங்களை கையில் எடுக்க உள்ளார்.

Also Read: கமல், அஜித், சூர்யா ஒன்றாக நடிக்க முயற்சி.. லோகேஷ் யுனிவர்ஸலை உடைக்க கௌதம் மேனன் போட்ட திட்டம்!