விடாமல் ரஜினியை துரத்தும் பழைய வேதாளம்.. சூப்பர் ஸ்டாரா என கண்டம் விட்டு கண்டம் ஓடும் விஜய்

Karthik Subbaraj tell story for Vijay: நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் அடையாளம் காணப்பட்ட கார்த்திக் சுப்புராஜ், தன் படத்தில் ஏதோ ஒரு மேஜிக் செய்து அனைவரையும் சபாஷ் போட வைத்து விடுவார்.  தனது முதல் படமான பீட்சாவிலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சிறந்தஅறிமுக இயக்குனருக்கான பரிசையும் வென்றார். தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி போன்ற ஹிட் படங்களை  கொடுத்தார்.  மெர்க்குரி படத்தில் கொஞ்சம் சருக்கியவர், மீண்டும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

ரஜினி ரசிகன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கார்த்திக் சுப்புராஜ் தலைவரை மாஸ் ஆக காட்டி பேட்டையை பிளாக் பஸ்டர் ஹிட் ஆக்கிய நிலையில்  தனது நீண்ட நாள் கனவான விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் விஜய்யை சந்தித்து இரண்டு கதை கூறினார்.

Also Read:3 மாஸ் இயக்குனர்களின் மிரட்டல் கூட்டணி எப்படி இருக்கு.? அனல் பறக்க வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ட்விட்டர் விமர்சனம்

விஜய்க்கு கதை திருப்தி தராததால் வேறு கதை இருந்தால் கொண்டு வாருங்கள் என்று அனுப்பிவிட்டாராம். கார்த்திக் சுப்புராஜுக்கு இது ஏமாற்றத்தை அளித்த போதும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 2 பாகத்தில் பிசியானார்.

தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 2 சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து உற்சாகம் அடைந்த கார்த்திக் மீண்டும் விஜய்க்காக கதை ரெடி பண்ணி வைத்துக் கொண்டு தூது விட்டு வருகிறார்.

ரஜினி பக்கத்துல இருக்கிறார் என்று தெரிஞ்சாலே தெறிச்சு ஓடும் விஜய், ரஜினி ரசிகருக்கு பட வாய்ப்பு கொடுப்பது என்பது கேள்விக்குறியே? மனம் தளராத  கார்த்திக் சுப்புராஜ், விக்ரமாதித்தனை விடாத வேதாளமாக மீண்டும் மீண்டும் கதை சொல்லி வருகிறார்.

Also Read:3 இடங்களை டார்கெட் செய்யும் விஜய்.. ராஜதந்திரியாக அரசியலுக்குப் தளபதி போடும் அஸ்திவாரம்