செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அவமானத்திற்கு அஞ்சி கூனி குறுகும் பூர்ணிமா.. புலம்ப விட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்

Bigg Boss Season 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 கிட்டத்தட்ட 60 எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் உண்மையான முகம் என்னவென்று தெரியாத அளவிற்கு பக்காவாக ஒரு முகத்திரையை போட்டு ஒவ்வொரு ஹவுஸ் மேட்சும் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் ஒருவரை பார்த்ததுமே இப்படிப்பட்டவர் தான் என்று கணிக்கும்படியான போட்டியாளர் யார் என்றால் பூர்ணிமா.

உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டேன் என்பதற்கு ஏற்ப இவருடன் மாயா சேர்ந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை எப்படி கவ்ப்பது என்று சூழ்ச்சியை போட்டு வருகிறார். ஆரம்பத்தில் மாயாவுக்கு கொஞ்சம் சப்போர்ட் கிடைத்திருந்தாலும் போகப் போக அதை இவரே கெடுத்துக் கொண்டார். அந்த வகையில் அர்ச்சனா என்ட்ரி ஆவதற்கு முன் நாம் தான் எல்லாமே என்று கர்வத்துடன் மாயா பூர்ணிமா ஒரு நினைப்பில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அர்ச்சனா உள்ளே நுழைந்த பிறகு அதை அப்படியே சுக்கு நூறாக உடைத்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் அர்ச்சனாவிற்கு கிடைத்த கைத்தட்டல்களை பார்த்து ரொம்பவே அப்செட் ஆகி விட்டார்கள். அதில் ஏற்பட்ட அவமானத்தின் மூலம் தற்போது ரொம்பவே அடக்கி வாசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் இப்படி பதுங்கி இருப்பது யாரையாவது கவுத்து விடுவதற்காக தான் இருக்கும்.

Also read: கமல் கேட்ட கேள்விக்கு சூடு சொரணை இருந்தா தூக்குல தொங்கிடு பூர்ணிமா.. சரியான சவுக்கடி

அந்த வகையில் பூர்ணிமா, கமலை பற்றி அவதூறாக பேசிய நிலையில் நேற்றைய எபிசோடில் எந்த அளவிற்கு கண்டிக்க முடியுமோ அதை தரமான சம்பவத்துடன் பூர்ணிமாவை வச்சு செய்து விட்டார் கமல்ஹாசன். இனிமேல் இவர் இருக்கும் தலை பக்கமே நான் படுக்க மாட்டேன் என்று சொல்லும் அளவிற்கு அவமானத்தின் உச்சகட்டத்திற்கு போய்விட்டார்.

இதற்கு இடையில் நேற்று மாயாவிடம், பூர்ணிமா இனிமேல் சீக்ரெட் வார்த்தையை பயன்படுத்திக் கூட எதுவும் பேசக்கூடாது என்று பிக் பாஸ் சொல்லிவிட்டது. அதனால் இனிமேல் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அது நமக்கே ஒரு பிரச்சினையாக திரும்புகிறது என்று மாயாவிடம் சொல்லி புலம்பித் தவிக்கிறார் பூர்ணிமா. இதையெல்லாம் முன்னே உணர்ந்திருந்தால் இப்போது குத்துதே குடையதே என்று புலம்பும் படியான அவசியம் வந்திருக்காது.

இதற்கு அடுத்தாவது பூர்ணிமா இதுவரை நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம் எந்த மாதிரியாக இருந்தோம் என்று உணர்ந்து இருந்தால் இருக்கும் கொஞ்சம் நஞ்ச மரியாதையும் மிஞ்சும். அந்த வகையில் இனி பூர்ணிமா ரொம்பவே அடக்கி வாசிப்பார். அதற்கு ஏற்ற மாதிரி எலிமினேட் ஆகி போன விஜய் வர்மா மற்றும் அனனியா உள்ளே நுழைந்து மறுபடியும் பூர்ணிமா மூஞ்சியில் கறியை பூசி விட்டார்கள்.

Also read: ஹவுஸ் மேட்ஸ்சை கிழித்து தொங்க போடும் அனன்யா.. தரமான சம்பவங்களுடன் பிக்பாஸ்

Trending News