வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

யாரும் குறை சொல்ல முடியாத சிறந்த 3 இயக்குனர்கள்.. லோகேஷ், ஷங்கர் நீங்க கூட கத்துக்கணும்

Best 3 Directors: என்னதான் தற்போது பிரம்மாண்ட இயக்குனர், 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைக்கும் அளவிற்கு படங்களை எடுத்திருந்தாலும் இவர்களிடம் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கிறது. முக்கியமாக தயாரிப்பாளரிடம் சொன்ன பட்ஜெட்டையும் தாண்டி செவை இழுத்துவிட்டு படத்தை எடுப்பது. குறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தவிப்பது, படப்பிடிப்பின் போது இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் நடக்கக்கூடிய தகராறு போன்ற பல விஷயங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது.

அதற்கெல்லாம் காரணம் சரியான பிளானிங் எதுவும் இல்லாததுதான். அதாவது இப்பொழுது உள்ள இயக்குனரின் முக்கிய எண்ணமே அதிக வசூலை அடைய வேண்டும் என்பதுதான். அதனால் படப்பிடிப்பின் போது நடக்கக்கூடிய பல விஷயங்களை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அதாவது படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் ஹீரோ வரவில்லை என்றாலும் படப்பிடிப்பை தள்ளி வைத்து விடுகிறார்கள். இதனால் சொன்ன நேரத்திற்கு படம் ரிலீஸ் பண்ண முடியாமல் வருட கணக்கில் இழுத்தடிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

ஆனால் இந்த மாதிரி எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறந்த இயக்குனர்களாக மூன்று இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்களின் நோக்கம் நல்ல கதையாகவும் இருக்க வேண்டும். அதே மாதிரி தயாரிப்பாளர்களுக்கு எந்தவித நஷ்டத்தையும் கொடுத்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள். அவர்கள் யார் என்றால் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி மற்றும் மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

Also read: லோகேஷ்க்கு லியோ காட்டிய பயம்.. தலைவர் 171 படத்தில் எடுக்கும் புது முயற்சி

இவர்கள் எடுக்கக் கூடிய படங்களைத் தாண்டி ஒரு சிறந்த இயக்குனர் என்று தயாரிப்பாளர்களிடம் பெயர் வாங்கி இருக்கிறார்கள். அதாவது நம்ம பணமா, யாரோ ஒருத்தர் பணம் கொடுக்கிறார், நம் இஷ்டத்துக்கு படத்தை எடுக்கலாம் என்று தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைக்காமல் நம்மை நம்பியவருக்கு எந்த விதத்திலும் துரோகத்தை பண்ண கூடாது என்று நினைக்கக் கூடியவர் தான் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சுந்தர் சி.

அதாவது இப்ப உள்ள இயக்குனர்களான லோகேஷ், ஷங்கர் மற்றும் பல முன்னணி இயக்குனர்கள் மீது தயாரிப்பாளர் மற்றும் சில ஹீரோக்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சுந்தர் சி மீது யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறந்த இயக்குனராக பிரதிபலிக்கிறார்கள். இயக்குனர்கள் என்றால் வெறும் வசூலை அதிகமாக கொடுப்பதில் மட்டுமில்ல, எல்லா விதமுமாக யோசித்து பிளானை சரியாக செய்வதிலும் சிறந்து விளங்க வேண்டும்.

அதாவது இந்த இரண்டு இயக்குனர்களை பொருத்தவரை ஹீரோ வரவில்லையா, கொஞ்சம் லேட் ஆகுதா, ஓகே அவருக்காக காத்திருக்க வேண்டாம். அவர் வரும்போது வரட்டும் என்று அவரை தவிர்த்து மற்ற காட்சிகளை எவ்வளவு எடுக்க முடியுமோ அதை எல்லாம் எடுத்து முடிக்கக்கூடிய சிறந்த பிளானிங் இயக்குனர்கள். அதனால்தான் கேஎஸ் ரவிக்குமாரால் தசாவதாரம் மற்றும் லிங்கா போன்ற பெரிய படங்களை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க முடிந்தது. இப்படி இவர்களிடம் இருக்கும் சில விஷயங்களை லோகேஷ் மற்றும் சங்கர் போன்ற பல முன்னணி இயக்குனர்கள் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

Also read: நெல்சன், லோகேஷ் கதையெல்லாம் கோடு மட்டும் தான்.. 67 வயதிலும் டஃப் கொடுத்த மணிரத்தினம்

- Advertisement -spot_img

Trending News