வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கரகாட்டக்காரன் பட கனகாவா இது.? வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்

Karakatakaran movie actress Kanaga: எப்போதுமே 80ஸ் ஹீரோயின்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு தனி அழகு தான் என்று சொல்லலாம். அந்த மென்மையான நடிப்பும், எதார்த்தமான நட்பும் அவர்களிடம் எப்போதுமே பூத்துக் குலுங்கும். அந்த வகையில் மண்மனம் மாறாமல், காலத்திலும் அளிக்க முடியாத படத்தில் நடித்தவர் தான் கனகா. இவர் பெயரை கேட்டதுமே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது கரகாட்டக்காரன் படத்தில் நடித்தது தான்.

அகலமான கண்கள், மெல்லிய தோற்றத்தில், ரெட்ட ஜடையை போட்டுட்டு, தாவணி கட்டிட்டு, கள்ளம் கபடம் அற்ற ஒரு நடிகை தான் நம்முடைய கனகா. கரகாட்டக்காரன் படத்தில் இவருடைய நடிப்புக்கு ஈடாக எந்த நடிகையாலும் நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. அப்படிப்பட்ட இவருடைய புகைப்படம் ஆச்சரியமூட்டும் அளவிற்கு இருக்கிறது.

இவரா கரகாட்டக்காரன் படத்தில் நடித்த கனகா என்று சொல்லும் அளவிற்கு வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். இவருடைய அம்மாவின் இறப்பிற்குப் பின் தனிமையை மட்டுமே விரும்பி வாழ்ந்து வந்தார். இடைப்பட்ட காலத்தில் பல வதந்திகள் வந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

Also read: கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

நான் யாரையும் நம்புவதாக இல்லை, அதனால் என்னை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். என்னுடைய வாழ்க்கையை நான் இஷ்டப்படி அமைத்துக் கொள்கிறேன் என்று தனியாக வாழ்ந்து வந்தார். அப்படிப்பட்ட இவரை நடிகை குட்டி பத்மினி நேரில் சந்தித்து ஒரு போட்டோவை எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியாக இருக்கிறார்கள். என்னது இது கனகவா? எங்களால நம்பவே முடியலையே. என்னாச்சு இவருடைய உடல் நிலைக்கு என்று ஆதங்கமாக கேட்கும் அளவிற்கு கனகாவின் புகைப்படம் இருக்கிறது.

வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகாவின் புகைப்படம்

kanaga
kanaga

Also read:  கோவை சரளா கவுண்டமணி ஜோடியாக நடித்த 5 படங்கள்.. ஜப்பானில் டாம் அண்ட் ஜெரியாக செய்த ரகளை

Trending News