சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அமீர்க்கு ஒன்னுனா நாங்க சும்மா இருக்க மாட்டோம் கௌதம், வீரா.. ராஜனுக்கு வக்காலத்து வாங்கிய 6 பிரபலங்கள்

Ameer: சும்மா கடந்த சங்க ஊதியே பெருசாக்கின விஷயத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். அது தற்போது அமீர் விஷயத்தில் பூதாகரமாக வெடித்திருக்கிறது. அதாவது சூர்யா மற்றும் கார்த்தி பற்றி பத்திரிகையாளரிடம் அமீர், ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து அமீர் மீது தான் முழுக்க முழுக்க தவறு. அவர் சரியான ஏமாற்றுக்காரர். பருத்திவீரன் படத்தை எடுக்கும் பொழுது நிறைய பணத்தை ஆட்டையை போட்டு இருக்கிறார் என்று தொடர் குற்றச்சாட்டு அமீர் மீது ஞானவேல் ராஜா வைத்து வந்தார்.

இதை கேள்விப்பட்ட அமீரின் நண்பர்கள் மற்றும் அவரின் நலம் விரும்பிகள் அவருக்கு சப்போர்ட்டாக ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் யார் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று தற்போது பார்க்கலாம். இதில் சமுத்திரகனி கூறியது, அமீரை பற்றி தப்பு தப்பா பேசியிருக்கிங்க, நீங்க சும்மா ஒரு பேருக்கு தான் தயாரிப்பாளர். அதுவும் அமீர் அண்ணா உங்களுக்கு விட்டுக் கொடுத்தது. ஆறு மாசம் பருத்திவீரன் படப்பிடிப்பின் போது நான் கூடவே இருந்து பார்த்தேன்.

பாதியிலேயே உங்களால பணம் தர முடியாது என்று போயிட்டீங்க. அதன் பின் அமீர் அண்ணா தெரிஞ்சவங்க, நண்பர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை வாங்கி ஒரு வழியாக படத்தை முடித்து வெளியிட்டார். எல்லாமே கூட இருந்து பார்த்த சாட்சி நான் இருக்கேன். அப்படி இருக்கும்போது வாய் கூசாம பொய் சொல்லுவதே பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது. தப்பா பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சமுத்திரக்கனி ஆவேசமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

Also read: தலைக்கு மேல வெள்ளமே போனாலும் அமீர் இல்லாம வாடிவாசல் இல்ல.. வெயிட்டான ரோல் கொடுத்திருக்கும் வெற்றிமாறன்

இவரை அடுத்து சசிகுமார், ஞானவேல் ராஜாவின் கருத்துக்களுக்கு வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லி பருத்திவீரன் படப்பிடிப்பிற்காக பாதி தொகையை என்னால் முடிந்தவரை நானே கடனாக கொடுத்திருக்கிறேன். நீங்க தயாரிப்பாளர்கள் என்கிற முகமூடியை போட்டுக் கொண்டீர்கள் அவ்வளவுதான் என்று அமீர்க்கு சப்போர்ட்டாக பேசி இருக்கிறார். அடுத்ததாக சினேகன், பருத்திவீரன் படத்தை முடிப்பதற்கு அமீர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவர் கூட பயணத்தை எண்ணை போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கு அறம் தெரிந்திருக்க வேண்டும் என்று கவிஞர் சினேகன் X தளத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் முத்தழகு அப்பாவாக நடித்த பொன்வண்ணனும் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கிய போது அமீர் அவர்கள் முழுமையாக பொறுப்பேற்று, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படபிடிப்பு செலவுகளை செய்தார். அதை நான் கூடவே இருந்து பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா, இறுதிச்சுற்று முதன் முதலாக திரை உலகில் வந்த பொழுது முதலில் இயக்குனர் அமீரிடமிருந்து தான் எனக்கு பாராட்டு கிடைத்தது. அந்த வகையில் அவரைப் பற்றி தெரிந்ததால் நான் சொல்ல விரும்புவது, தேவையில்லாமல் அவருடைய இயக்குனர் இமேஜை கெடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்ததாக வெற்றிமாறன், எனக்கும் அமீர்க்குமான உண்டான நட்பு பல வருடங்களாக இருக்கிறது. அதனாலேயே அவர் என்னுடைய படங்களில் இருக்க வேண்டும் என்பதற்காக வடசென்னை என்ற படத்தில் ராஜன் கேரக்டரில் நடிக்க வைத்தேன். எங்களுடைய நட்பு எந்த அளவுக்கு உண்மையானதோ, அதே மாதிரி அவர் இயக்குனராகவும் கறை படியாத ஒருவர். அந்த வகையில் எங்களுடைய பயணம் எப்போதுமே தொடரும் என்று கூறியிருக்கிறார். அதனால் தான் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று வாடிவாசல் படத்தில் அமீர்க்கு முக்கியமான கதாபாத்திரத்தை நான் கொடுத்திருக்கிறேன் என்று பெருமிதத்துடன் சொல்லி இருக்கிறார். இதில் அமீர் செய்த தவறு ஒன்றே ஒன்றுதான். சூர்யாவிற்கு கௌதம் கேரக்டரை கொடுத்து மௌனம் பேசியதே படத்தில் நடிக்க வைத்தது. அடுத்து கார்த்திகை ஹீரோவாக ஆக்குவதற்கு பருத்திவீரன் படத்தை எடுத்ததுதான்.

Also read: ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமீர்.. 16 வருஷமா துரோகிகளை படிக்க முடியல!

- Advertisement -spot_img

Trending News