தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை தெலுங்கிலும் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். அதன் பின் இவருக்கு தென்னிந்திய திரை உலகில் வாய்ப்புகள் குறைய துவங்கியதும் ஹிந்தி பக்கம் சென்றார். பாலிவுட்டில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும் இப்போது அடல்ட் படங்களில் அசால்டாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் பாலிவுட்டில் பிஸியான ஹீரோயின் ஆக வலம் வரும் அவர், டாப் ஹீரோவின் படத்தில் மறுபடியும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் அவர் எதிர்பார்த்த மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதிலும் இவர் ஆடிய கிளாமர் தூக்கலான டான்ஸ் இளசுகளை கவர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த நடிகை இப்போது ஹிந்தியில் அவருடன் இணைந்து நடித்த நடிகரையே காதலித்து விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
Also read: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த நடிகை.. வாய்ப்புக்காக செய்த டகால்டி வேலை
இவர்கள் இருவரும் திருமணம் ஆகாமலே ஊர் சுத்த துவங்கியதால் இரண்டு குடும்பத்தினரும் போடும் அழுத்ததால் இன்னும் சில மாதங்களில் அவர்களது திருமணம் நடக்கப்போகிறது. ஆனால் அந்த நடிகை சமீப காலமாகவே கை நிறைய பணம் வாங்கிக்கொண்டு பத்திரிகைகளுக்கு பலான போஸ் கொடுத்து வருகிறார்.
இவையெல்லாம் அவருடைய வருங்கால கணவருமான அந்த காதலனின் அனுமதியுடன் தான் நடக்கிறது. மார்க்கெட் படுத்து விடுவதற்குள் வேணுங்கிற பணத்தை சீக்கிரம் சம்பாதித்துக் கொள்ளலாம் என, அந்த கிளாமர் குயின் இப்போது பத்திரிக்கையின் அட்டை படங்களுக்கு கண் கூசும் அளவுக்கு போஸ் கொடுத்து கஜானாவை நிரப்புகிறார்.
Also read: பாய் பிரண்டுடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை.. கடும் கோபத்திற்கு உள்ளான ஹீரோ