ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தொடர்ந்து 14 நாள் சிகிச்சை, கேப்டனுக்கு என்ன தான் ஆச்சு.. அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை அறிக்கை

Vijayakanth Health Report: கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சில வருடங்கள் ஆகவே பொதுவெளியில் அதிகம் தென்படுவது இல்லை. உடல்நல குறைவால் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த இவர் கடந்த ஒரு வாரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த செய்திகள் வெளிவந்து ரசிகர்களையும் பொது மக்களையும் கலவரப்படுத்தியது. ஆனாலும் கேப்டனுக்கு ஒன்றும் இல்லை. விரைவில் வீடு திரும்புவார் என அவர் தரப்பிலிருந்து செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள மருத்துவ அறிக்கை பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: வளர்த்த கடா உயர்வது பொறுக்காத விஜயகாந்த்.. இன்றுவரை கேப்டன் மேல் உள்ள ஒரே கரும்புள்ளி

அதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை ஆரம்பித்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்திருக்கிறது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அவர் உடல்நிலை சீராக இல்லை. அதனால் தற்போது அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

மேலும் அவர் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும். விரைவில் விஜயகாந்த் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம் என மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகி உள்ளது. இது ஒட்டுமொத்த மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Also read: 80, 90களில் கமலுக்கு டஃப் கொடுத்த விஜயகாந்த்.. ஒரே நாளில் விடாமல் 22 தடவை மோதிய கேப்டன்

அதன்படி கேப்டன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பலரும் தங்கள் பிரார்த்தனையை முன் வைத்து வருகின்றனர். சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்திய விஜயகாந்த் பரிபூரண நலம் பெற அவருடைய கட்சித் தொண்டர்களும் வேண்டுதல்களை வைத்து வருகின்றனர்.

vijayakanth-healt-condition
vijayakanth-healt-condition

Trending News