சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ரஜினியை பார்த்து நடிக்க வந்த 5 கருப்பு நடிகர்கள்.. மனசு வெள்ளை நிரூபித்துக் காட்டிய கேப்டன்

5 Black Colour Actors winning the Cinema: சினிமாவிற்குள் வருவதற்கு கலரும் அழகும் தேவை என்கிற பிம்பத்தை உடைத்துக் காட்டிய தலைவர் தான் ரஜினிகாந்த். அத்துடன் கருப்புதான் அழகு என்று சொல்லும் அளவிற்கு அனைவரது மனதிலும் பதித்து விட்டார். இவரைப் பார்த்த பிறகு தான் கலர் வெறும் நிறம் மட்டும்தான். ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று புரிந்தது. அந்த வகையில் ரஜினியை பார்த்து நடிப்பதற்கு ஐந்து நடிகர்கள் வந்து ஜெயித்து காட்டி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

லாரன்ஸ்: ஆரம்பத்தில் எவ்வளவோ கஷ்டங்களை தாண்டிய நிலையில் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால் வந்த பிறகும் பல அவமானங்களையும், கிண்டல்களையும் சந்தித்தார். அதன் பின் தன்னுடைய மானசீக குருவாக இருக்கும் ரஜினியை நினைத்து அவரைப் போல் நாமும் ஜெயிக்க வேண்டும் என்று மனதில் முழு நம்பிக்கையை வைத்து தோல்விகளை தூக்கி எறிந்து வெற்றிப் பாதைக்கு அடி எடுத்து வைத்தார். அதனால் தற்போது தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார்.

விஜயகாந்த்: இவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் கலர் தான் கருப்பு, மத்தபடி மனசு வெள்ளை என்று சொல்வதற்கு ஏற்ப சொக்கத்தங்கம். இவர் நடிக்கும் காலத்தில் ரஜினி கமலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜொலித்திருக்கிறார். அத்துடன் இவருடைய நேர்மையான பேச்சும், தன்னம்பிக்கையின் நடிப்பும் அனைவரையும் ஊக்கப்படுத்தி இருக்கிறது. அதனால்யே தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற முத்திரையை பெற்று கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

Also read: தொடர்ந்து 14 நாள் சிகிச்சை, கேப்டனுக்கு என்ன தான் ஆச்சு.. அதிர்ச்சி கொடுத்த மருத்துவமனை அறிக்கை

பார்த்திபன்: இவர் பேச்சு புரியாத புதிராக இருந்தாலும் நடிப்பால் அனைவரையும் கட்டி இழுக்கும் திறமை இவரிடம் இருக்கிறது. செண்டிமெண்ட், காமெடி, சண்டை என அனைத்து பரிமாணங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் பார்க்க கருப்பாக இருந்தாலும் இவருடைய நடிப்பு நின்னு பேசும் அளவிற்கு சாதனை படைத்திருக்கிறது.

முரளி: தற்போதைய காலத்தில் என்னதான் பெரிய பெரிய நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களை எப்பொழுதுமே மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பார்கள். அந்த லிஸ்டில் நடிகர் முரளி இடம்பெற்றிருக்கிறார். வெள்ளை நிறத்தில் உள்ள நடிகர்கள் தான் ஜெயிக்க முடியும் என்ற மாயையை உடைத்து மக்கள் ஏற்றுக் கொண்ட நாயகனாக வலம் வந்திருக்கிறார்.

விஜய் சேதுபதி: இளமை, அழகு, தோற்றம் இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். என்பதை தாண்டி திறமை இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு. என்பதற்கு எடுத்துக்காட்டாக விஜய் சேதுபதி மக்கள் செல்வன் என்ற முத்திரையை ரசிகர்களிடம் பதித்து விட்டார். எதார்த்தமான பேச்சும் நடிப்பும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜெயித்துவிட்டார். அந்த வகையில் கலர் ஒரு பிரச்சினையை இல்லை என்பதை உடைத்து இருக்கிறார்.

Also read: மார்க்கெட்டை சுத்தமா தொடச்சி தூர போட போகும் சைக்கோ இயக்குனர்.. பீதியில் இருக்கும் விஜய் சேதுபதி

Trending News