சினிமா செய்திகள்

மிஷ்கினுக்காக விஜய் சேதுபதி இறங்கி செய்யப் போகும் சம்பவம்.. வைரலாகும் ஃபஸ்ட் லுக் போஸ்டர்

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியாகி வைரல் ஆகிறது. 

By · 01 டிசம்பர் 2023 · Updated 10 மே 2025
mysskin-vijay-sethupathi

Actor Vijay Sethupathi Movie First Look Poster: பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கிய மிஷ்கின் சமீப காலமாக டாப் நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இவருக்கு படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருந்தாலும் இவருடைய படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் யாரும் முன்வரவில்லை.

அந்த அளவிற்கு தன்னுடைய படங்களில் இணையும் நடிகர்களுடன் இவருக்கு நிறைய முரண்பாடுகள் ஏற்படுகிறது. ஆனால் மிஷ்கினின் நண்பரான விஜய் சேதுபதி பிரண்ட்ஷிப்பிற்காகவே அவருடைய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். மிஷ்கின் இயக்கும் 11-வது படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

படத்தின் டைட்டில் ‘ட்ரெயின்’ என பெயரிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ட்ரெயின் திரைப்படம் தனது பயணத்தை தொடங்குவதாகவும் பட குழு தெரிவித்துள்ளது.

ட்ரெயின் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்

அதுமட்டுமல்ல இதில் விஜய் சேதுபதி தாடி மற்றும் மீசையுடன் இருக்கிறார். அத்துடன் ரயில் தடம் மற்றும் ரயில்கள் செல்வது போல ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளனர். தற்போது விடுதலை 2, மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி அடுத்ததாக ட்ரெயின் படப்பிடிப்பில் இணைகிறார்.

ட்ரெயினில் பயணம் செய்யும் விஜய் சேதுபதி அந்த ரயிலில் இருக்கும் குண்டுவெடிப்பை எப்படி தடுக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. ட்ரெயின் படத்தில் மிஷ்கினுக்காக விஜய் சேதுபதி இறங்கி தரமான சம்பவத்தை செய்யப் போகிறார் என அவருடைய  ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்  இருக்கின்றனர்.

அது மட்டுமல்ல விஜய் சேதுபதி சமீப காலமாகவே வில்லனாகவே நடித்துக் கொண்டிருப்பதால் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என  உறுதி எடுத்துள்ளார். ஆகையால் இந்த படத்தின் மூலம் மறுபடியும் விஜய் சேதுபதியை ஒரு ஹீரோவாக பார்க்க போகிறோம்.

ட்ரெயின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Vijay Sethupathi Movie First Look Poster
Vijay Sethupathi Movie First Look Poster