வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை.. தப்பா எடை போட்ட மாமனாருக்கு வைத்த செக்

Ajith-Shalini: ஒரு படத்தில் சேர்ந்து நடித்து விட்டாலே ஹீரோ ஹீரோயினுக்குள் எக்கச்சக்கமாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிடுகிறது. அப்படி ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிய எத்தனையோ தம்பதிகளை பார்த்திருப்போம். ஆனால் கொஞ்சம் கூட குறையாத காதலோடு இருப்பவர்கள் வெகு சிலர் தான்.

அப்படிப்பட்ட ஒரு ஜோடி தான் அஜித் ஷாலினி. இப்பவும் காதலுக்கு குறைவில்லாமல் அன்புடன் வாழும் இவர்களின் கல்யாண கதையே ஒரு சுவாரஸ்யம் தான். அதாவது அஜித், ஷாலினியை திருமணம் செய்ய முடிவு செய்து பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் ஷாலினியின் அப்பாவுக்கு இதில் விருப்பம் இல்லையாம்.

மதம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அப்பொழுது தான் ஷாலினி முன்னணி அந்தஸ்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். திடீரென்று திருமணம் ஆனால் என்ன செய்வது என்று அவரின் அப்பா யோசித்து இருக்கிறார். மகள் சினிமாவில் சம்பாதித்து கொஞ்சம் செட்டில் ஆகி விடட்டும் என்பது அவருடைய எண்ணமாக இருந்திருக்கிறது.

Also read: கண்ட நாயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்.. தயாரிப்பாளரை கோபப்பட்டு திட்டிய அஜித்..!

அதனால் அவர் அஜித்திடம் ஒரு கோடி கொடுத்தால் இந்த திருமணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படிச் சொன்னால் அவ்வளவு பணத்தை தர முடியாமல் அஜித் விலகிவிடுவார் என்பது அவருடைய எண்ணம். ஆனால் அஜித் தன் வாழ்வில் வந்த தேவதையை விட்டுவிடக்கூடாது என்று அந்த பணத்தை மாமனாரிடம் தூக்கி கொடுத்ததாக ஒரு தகவல் இப்போது கசிந்து வருகிறது.

இதிலிருந்தே அவருடைய காதல் எந்த அளவுக்கு ஆழமாக இருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேபோல் இருவரின் ஜாதகத்திலும் 10 பொருத்தமும் பக்காவாக இருந்திருக்கிறது. அந்த வகையில் தன்னை தப்பாக எடை போட்ட மாமனாருக்கு செக் வைத்து தன் காதலியை மனைவியாக்கி இருக்கிறார் அஜித்.

Also read: அஜித்துக்கு ஞானவேல் ராஜாவே பரவால்ல.. பணத்தை கொடுத்து ஏமாந்த தயாரிப்பாளர்

Trending News