Gossip News: நடிகைகளில் ஒரு சிலர் தான் நடிக்கும் பொழுது அவருடைய கண்களே மொத்த உணர்ச்சிகளையும் சொல்லிவிடும். அப்படிப்பட்ட கண்களுக்கு சொந்தக்காரியாக இருந்த நடிகையை மூத்த நடிகர் ஒருவர் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டு மொத்தமாக கழட்டி விட்டிருக்கிறார். ஒரு காலத்தில் ரசிகர்கள் கொண்டாடிய அந்த நடிகை இன்று வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சினிமா மற்றும் அரசியலில் இருக்கும் நிறைய பேர் அதிகமாக மூட நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். உடனே முன்னுக்கு வந்து விட வேண்டும், உடனே பதவி கிடைத்து விட வேண்டும் என ஏதாவது ஒரு சாமியாரை பிடித்து வைத்துக் கொண்டு, அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் நிறைய பேர்.
Also Read:ஷூட்டிங் பார்க்க வந்த குடும்ப பெண்ணை கரெக்ட் செய்த வில்லன்.. மாமா வேலை பார்த்த மகாபிரபு
அப்படித்தான் இந்த அக்கட தேசத்து ஹீரோவும் இருந்திருக்கிறார். சினிமாவில் ஒரு கால் அரசியலில் ஒரு கால் என வைத்துக்கொண்டு இரண்டிலுமே முதல் இடத்தில் இருக்க வேண்டும் என அந்த நடிகர் ஆசைப்பட்டிருக்கிறார். இதற்காக மாயம் மற்றும் மாந்திரீகத்தை ரொம்பவும் நம்பி இருக்கிறார். பதவி ஆசையில் நரபலி வரைக்கும் சென்றதாக கூட செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சாமியார் கொடுத்த ஐடியா
அவரிடம் ஒரு சாமியார் உன்னை விட சின்ன பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அரசியலில் ஓகோ என்று வருவாய் என சொல்லி இருக்கிறார். அந்த மூத்த நடிகருக்கு ஏற்கனவே கண்ணழகு நடிகையின் மீது ஒரு பார்வை இருந்திருக்கிறது. சாமியார் சொன்னதை சாதகமாக ஆக்கிக் கொண்டு கண்ணழகு நடிகையை திருமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்.
கண்ணழகு நடிகையின் அம்மாவிற்கு ஏற்கனவே பணத்தின் மீது தீராத ஆசை இருந்திருக்கிறது. மூத்த நடிகர் கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சரி என்று தலை ஆட்டி இருக்கிறார். கண்ணழகு நடிகைக்கு சின்ன வயது என்பதால் நடப்பது என்ன என்று கூட புரியாத மன நிலையில் இருந்திருக்கிறார். திருமணம் முடிந்த கையோடு எல்லாத்தையும் முடித்து விட்டு கழட்டி விட்டிருக்கிறார் அந்த சீனியர் நடிகர். ஏற்பட்ட ஏமாற்றத்தால் அந்த வாரிசு நடிகை பித்து பிடித்தது போல் ஆகிவிட்டார்.