வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

யாருக்குமே தகுதி இல்லை.. கடைசியாக கும்பிடு போட்ட பிக் பாஸின் குருநாதர்

Bigg Boss 7: இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலேயே புரியாத புதிராக இருக்கும் போட்டியாளர்கள் இவராகத்தான் இருப்பார்கள். காரணம் 60 நாட்களை தாண்டிய நிலையிலும் இப்பொழுது வரை யார் வெற்றி பெறுவார், யார் உண்மையான போட்டியாளர் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு முகத்திரையை போட்டு இருக்கிறார்கள்.

அதிலும் அர்ச்சனாவிற்கு நான் பேசுவது தான் சரி, நான் மட்டும்தான் நேர்மையாக விளையாடுகிறேன் என்ற மெதப்பில் சுற்றி வருகிறார். ஆனால் இவரை பொறுத்தவரை ஒரு விஷயம் கிடைத்தால் அதை பெருசாக்கி சண்டை போட்டு சீன் கிரியேட் பண்ணுவது மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார். அத்துடன் வீட்டில் யாராவது இவரை ஒரு வேலை சொல்லி விட்டால் அதற்கு ஒரு பஞ்சாயத்தை வைத்து காது பஞ்சர் ஆகும் அளவிற்கு வாய் அடிப்பார்.

அதன்பின் விசித்திரா, இவருடைய விளையாட்டு மற்றும் கேரக்டர் ஓரளவுக்கு மக்களுக்கு பிடித்து போனதால் ஓகே இவர் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கும் நான் தகுதி இல்லை என்பதை காட்டும் விதமாக சண்டையை ரசித்து வேடிக்கை பார்ப்பது.  அடுத்ததாக பிக் பாஸ் வீட்டுக்குள் போனதும் சரவெடியாக வெடித்துக் கொண்டிருந்த தினேஷ் தற்போது புஷ்வானமாக மாறிவிட்டார்.

Also read: அவமானத்திற்கு அஞ்சி கூனி குறுகும் பூர்ணிமா.. புலம்ப விட்டு வேடிக்கை காட்டும் பிக் பாஸ்

அடுத்ததாக மாயா, ஆரம்பத்தில் இவருடைய விளையாட்டு நன்றாக இருந்தாலும் சில கெட்ட சகவாசத்தால் இவருடைய பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. இதை தெரிந்து கொண்டதால் கமுக்கமாக இருந்து சில பல சூழ்ச்சிகளை செய்து போட்டியாளர்களின் காலை வாரிக் கொண்டு வருகிறார். இதில் பலிகாடாக சிக்குனது தான் பிரதீப். இதனை அடுத்து அமைதிக்கு பின் புயல் என்பதற்கு ஏற்ப கமுக்கமாக இருந்து வெற்றியை ருசிக்கலாம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர்களுக்கு எல்லாம் இடையில் ஏன் வந்தோம், எதுக்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் போட்டியாளர்கள் தான் மணி, ரவீனா, கூல் சுரேஷ், அனன்யா,விஜய் வர்மா, விக்ரம். அடுத்து இவர்களை எல்லாம் கூட கொஞ்சம் நம்பலாம். ஆனால் எதற்குமே சரிப்பட்டு வர மாட்டோம் என்று இரண்டு பேர்கள் அங்கே சுற்றி வருகிறார்கள். அவர்கள் தான் விஷ்ணு மற்றும் பூர்ணிமா. அதிலும் பூர்ணிமா உடம்பு முழுவதும் விஷம் தான்.

அதனால தான் வாரம் முழுவதும் சகுனி வேலையை பார்த்துட்டு வார கடைசியில் ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி மூஞ்சிய தொங்க போட்டு விடுவார். இதனால் இந்த போட்டியாளர்கள் யாரும் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்கள் இல்லை என்று மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். அத்துடன் கமலின் பெயரும் ரொம்பவே பிரதீப் விஷயத்தில் டேமேஜ் ஆனதால் இந்த சீசனையே கடைசியாக முடித்துக் கொள்ளலாம் என்று பிக் பாஸ்க்கு கும்பிடு போட்டு விட்டார் குருநாதர்.

Also read: மீண்டும் வாய்ப்பு கொடுத்தும் மிக்சர் தின்னும் 2 பேர்.. என்ன பிக் பாஸ் உங்க கண்ணுக்கு இது தெரியலையா?

Trending News