Tamil debut actors in feel good movies: விவேக் அவர்கள் கஷ்டப்பட்டு நடிக்கும் போது வராத டயலாக், இயல்பாக கூறும் “எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்” டயலாக்கை டைரக்டர் ஓகே செய்ய ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் கேட்பார் விவேக். அதுபோல இன்றைய புதுமுகங்கள் கஷ்டப்பட்டு என்ட்ரி கொடுத்து ஒரு படம் ஹிட்டானதும் தன் மார்க்கெட்டை உயர்த்தி விடுகிறார்கள் அப்படியான சிலர்
சூரி: “மறுபடியும் முதல்ல இருந்து சாப்பிடுறேன்” என காமெடியாக அறியப்பட்ட சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலையின் மூலம் நடிகராக இனம் காணப்பட்டார். அதிகார வர்க்கத்திற்கு இணங்காமல் தேவையற்ற தண்டனை வாங்கி மக்களின் இரக்கத்தை சம்பாதித்து ரசிகர்களின் மனதோடு ஒட்டிவிட்டார். இந்த காமெடி நடிகருக்கு ரொமான்ஸ் வருமா? என்பதை பொய்யாக்கி ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பின் மூலம் பார்க்கும் அனைவரையும் தன் வசப்படுத்தினார் சூரி.
கவின்: சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து வெள்ளித்திரையில் தடம் பதித்து இருக்கும் கவின் நடிப்பில் வெளிவந்த டாடா பாக்ஸ் ஆபிஸ் ஹீட் அடித்தது. கலவையான உணர்வுகளை பர்பெக்ட்டாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் கவின்.
மணிகண்டன்: நான் காலி என்று குட் நைட் படம் பார்த்த அனைவரையும் காலி செய்து விட்டார் மணிகண்டன். நடுத்தர குடும்பத்தில் எதிர்கொள்ளும் அண்ணன், தம்பியாகவும், ஆங்கிலம் புலமை குறைந்த ஐடி ஊழியனாகவும், தாழ்வு மனப்பான்மையோடு மனைவியை அரவணைக்கும் கணவனாகவும் தன் கதாபாத்திரத்தில் கண கச்சிதமாக பொருந்தி மக்கள் மனதில் நின்று விட்டார் குட் நைட் மணிகண்டன். இனி நாயகனின் மகன், நண்பன் என சைடு பாத்திரம் இல்லாமல் மெயின் ரோலில் மட்டுமே அவர் நடிக்க இருப்பது செவி வழி செய்தி
அர்ஜுன் தாஸ்: சாக்லேட் பாய் போன்று இருக்கும் இவர் கைதியில் வில்லனாக அறிமுகமானாலும் பல பேரின் மனதை கவர்ந்திருந்தார். தன் குரலில் ஏதோ மேஜிக் வைத்திருக்கும் அர்ஜுன்தாஸ்யை பார்க்க பெண் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அநீதி சிறந்த விமர்சனத்தை பெற்றதின் மூலம் தான் திறமையான நடிகர் என்பதை தமிழ் சினிமாவிற்கு உணர்த்தியுள்ளார்.
ரியோ: பிக்பாஸிற்கு பிறகு அதிகம் தலை காட்டாமல் இருந்த ரியோராஜ் ஜோ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். காதல், திருமணம், தோல்வி என வழக்கமான பார்முலாவை பயன்படுத்தினாலும் வித்தியாசமான கதைகளத்தின் மூலமும் தன் சிறப்பான நடிப்பின் மூலமும் அதை ஃபீல் குட் மூவியாக உணரச் செய்தார் ரியோ.
Also read:கொடூர வில்லனாக நடித்து காமெடி பீஸ்ஸாக மாறிய 5 நடிகர்கள்.. மொட்ட ராஜேந்திரனை ஓட ஓட விரட்டிய விஜய்