ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

2023 அதிகமா எதிர்பார்க்கப்பட்டு புஸ்ன்னு போன 5 நடிகர்கள்.. நயன்தாராவிற்கு கொக்கி போடும் கோமாளி

5 tamil actors upcoming movies in 2024: கடந்த ஆண்டு 2022 இல் ஹிட் கொடுத்துவிட்டு 2023 இல் சில ஹீரோக்களின் படங்கள்  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர். அவர்களில் சிலர் படங்கள் பல காரணங்களால் வெளிவர இயலாமல் போனது.

பிரதீப் ரங்கநாதன்: ஜெயம் ரவி நடித்த கோமாளி மூலம் வெற்றி இயக்குனராக அறிந்த பிரதிப் ரங்கநாதன் லவ் டுடே மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். மோஸ்ட் வான்டட் லிஸ்டில் இருக்கும் இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில்  நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது கூடுதல் தகவல் என்னவென்றால் நயன்தாரா பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நடிக்க இருக்கிறாராம்.

லெஜண்ட் சரவணன்: தன்னம்பிக்கையின் இலக்கணமாக திகழும் சரவணன், லெஜண்ட் மூவிக்கு பின் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே தலை காட்டினார். இவரின் அடுத்த படம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “காக்கா கழுகு கதைகள் வேண்டாம், சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்” என்று ரஜினி மற்றும் விஜய்யை மாற்றி மாற்றி வெறுப்பேத்தி ட்ரெண்டிங்கில் மட்டுமே வந்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.

Also read: 2023-இல் புது முகங்களாக வசூல் வேட்டையாடிய 5 இளம் ஹீரோக்கள்.. தனுஷ் இடத்தை பிடிக்க போராடும் மோட்டார் மோகன்

துருவ் விக்ரம்: வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட துருவ் விக்ரம் தந்தையுடன் இணைந்த  மகான் படத்திற்கு பின்  இந்த வருடம் சந்தோஷ் நாராயணன் இயற்றிய பூமதியே பாடலிலும் தெலுங்கில் ஒரு ஆல்பம் சாங் மற்றும் தலைக்காட்டி ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.  டாடா புகழ் கணேஷ்பாபு இயக்கத்திலும் மாரி செல்வராஜின் ஒரு பயோபிக் படத்திலும் கபடி பிளேயர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

அதர்வா: அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆன பின்பும் சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே தலைகாட்டி வரும் அதர்வாவுக்கு இந்த வருடம் வெளியான பட்டத்து அரசன் வசூல் ரீதியாக  வெற்றி பெறவில்லை ஆயினும் அடுத்த ஆண்டுக்கு இவரின் அட்ரஸ், நிறங்கள் மூன்று, ஒத்தைக்கு ஒத்த போன்ற பல படங்கள் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன

விஷ்ணு விஷால்: வேறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது தனித்துவத்தை நிரூபிக்கும் விஷ்ணு விஷால்க்கு இந்த வருடம் எந்த படமும் கை கொடுக்காத பட்சத்தில் ரஜினியுடன் லால் சலாம், ஜகஜால கில்லாடி, ஆர்யன், வீரதீரசூரன் என பல படங்களை முடித்து வெய்டிங்கில் உள்ளார். இவை அடுத்த வருடம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: 1000 கோடி வசூலை எதிர்பார்த்து வெளிவர உள்ள பிரம்மாண்டமான 6 படங்கள.. கங்குவாவை மிஞ்சுமா காந்தாரா!

Trending News