Actor Vijay : விஜய் தனது தந்தையின் செல்வாக்கு காரணமாக சினிமாவில் நுழைந்தாலும் அவருடைய கடின உழைப்பு மற்றும் சினிமாவின் மீதுள்ள ஆசை ஆகியவற்றால் தான் மிகப்பெரிய உயரத்தில் உள்ளார். பொதுவாக விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பாக பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மற்றும் மாணவியருக்கு தொகுதி வாரியாக பரிசுகளை வாரி வழங்கி இருந்தார். இந்த சூழலில் மாவட்டம் தோறும் நூலகம் திறக்கவும் விஜய் முன் வந்தார். இப்படி இருக்கும் சூழலில் அரசியல் ஆசையால் தான் விஜய் இவ்வாறு செய்கிறார் என்று ஒரு விமர்சனம் எழுந்தது.
அரசியலுக்கு வருவதால் தான் விஜய் இவ்வாறு செய்கிறார் என்று சொன்னாலும் அவருக்கு ஆதரவு பெறும் அளவில் இருந்து வந்தது. ஆனால் சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உதவுமாறு விஜய் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
இவ்வளவு கால தாமதமாக விஜய் ட்வீட் போட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. எப்போதுமே விஜய் படத்தின் ஒரு சிறிய போஸ்டர் வெளியானாலும் குறைந்தபட்சம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக தான் லைக்ஸ்கள் வரும். ஆனால் நேற்றைய தினம் விஜய் போட்ட பதிவு வெறும் 72k மட்டுமே லைக்ஸ்களை பெற்று இருக்கிறது.
இதற்கு காரணம் விஜய் புயலே ஓய்ந்த பின்பு 48 மணி நேரம் கழித்து இந்த பதிவை போட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் முதல் ஆளாக வந்து உதவிய நிலையில் விஜய் இவ்வாறு செய்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியிலேயே ஆச்சரியத்தையும், வேதனையையும் தான் கொடுத்திருக்கிறது. இதனால் அவரது அரசியல் ஆசையில் பெரும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
