புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கிளாமார் வாய்ப்பு தேவையில்லைனு சொல்லும் 5 நடிகைகள்.. எப்போதுமே மவுஸ் குறையாத சாய்பல்லவி

South Indian Actresses say no for glamour: சினிமாவில் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போட்டோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகின்றனர். நிலைமை அவ்வாறு இருக்க முன்னணி நடிகைகள் சிலரோ கிளாமர் காட்டினால் நல்லா இருக்காது, ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்று பிடிவாதமாக உள்ளனர். இந்த கொள்கையை  எத்தனை நாள் கடைபிடிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

சாய் பல்லவி: மலர் டீச்சரை அறியாதவர்கள் மலையாளத்தில் உண்டோ என்னும் அளவுக்கு பெயர் எடுத்த சாய் பல்லவி, தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரை தேர்ந்தெடுத்து தடம் பதித்து  வருகிறார். கதைக்கு தேவை என்று இயக்குனர் வேண்டினாலும் கவர்ச்சிக்கு நோ சொல்லி விடுவாராம். தற்போது கன்னடத்தில் வசூல் மன்னன் யாஷ் உடன் ஒரு கேங்ஸ்டர் படம் பண்ணுவதாக செய்தி.

பிரியங்கா மோகன்: டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரசிகர்களை அசர வைத்தார் பிரியங்கா மோகன். வசீகர தோற்றத்தினாலும் நேர்த்தியான உடையினாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரியங்கா தொடர்ந்து டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததோ என்னவோ கருப்பு நிற உடையில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.

Also Read: வாயால் வாழ்ந்துகெட்ட 5 நடிகைகளின் சோகக் கதை.. விவாகரத்தே மேல் என பிடித்ததை விட மறுத்த அமலாபால்

ஐஸ்வர்யா ராஜேஷ்: எந்த வகையான கேரக்டர் கொடுத்தாலும் தட்டி தூக்கி விடும் ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் அடிமட்டத்திலிருந்து முன்னுக்கு வந்தவர். காக்கா முட்டை, ரம்மி, வடசென்னை, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். எந்த ஒரு இகோவும் இல்லாமல் சகஜமாக பழகும் இவர் கதைக்கு தேவை இல்லை என்று தாமாகவே கவர்ச்சியை ஒதுக்கி விடுகிறார்.

சமந்தா:  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக கட்டம் கட்டி வரும் சமந்தா கதைக்கு தேவை இல்லாமல் கிளாமராக நடிப்பது இல்லை. தெலுங்கு நடிகை ஒருவர் சமந்தாவின் உடல் அமைப்பை வைத்து கேலி செய்த போதும் கண்டு கொள்ளாத இவர் அடிக்கடி  புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி: லவ்லி பிரின்சஸ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஐஸ்வர்யா லட்சுமி விஷாலின் ஆக்சன் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக வந்து ரசிகர்களின் மனதை ஆட்சி செய்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என இந்தியாவின் பிசியான நடிகை ஆகிவிட்டார்.  இதுவரை கவர்ச்சிக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி பாலிவுட்டில் போய் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. ப்ளூ, பிளாக் என செறிவுமிகு வண்ணங்களில்  புகைப்படம் எடுத்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

Also Read: ஹீரோயின்கள் மத்தியில் அமீர் வளர்த்த கலாச்சாரம்.. கெட்டியாக பிடித்து பெயரைக் காப்பாற்றிய 5 நடிகைகள்

Trending News