வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மூன்று முடிச்சால் முட்டாளான பப்லுவின் நிலை.. வாயை பிளக்க வைக்கும் மொத்த சொத்தின் மதிப்பு

Actor Babloo prithiveeraj net worth: பொருந்தா காதலுடன் சமூகத்தில் தன் நற்பெயரை கெடுத்துக் கொண்ட பப்லு ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் செல்ல பிள்ளையாக இருந்துள்ளார். எம்ஜிஆரின் “நாளை நமதே” மற்றும் சிவாஜியின் தம்பியாக “நான் வாழவைப்பேன்” படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் பப்லு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்த மொழிகள் அனைத்திலும் பலவற்றிலும் நடித்திருந்த பப்லு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரையிலும் அலைபாயுதே, வாணி ராணி, மர்ம தேசம் போன்ற தொடர்களிலும் நடித்து அரை நூற்றாண்டுக்கும் மேல் கலைத்துறையுடன் ஒன்றி வாழ்ந்து வருகிறார்.

Also Read: நடிகர் திலகம் சிவாஜி தட்டிக் கொடுத்து வளர்த்த பப்லு.. குழந்தை நட்சத்திரமாக நடித்த 5 படங்கள்

இது போக ஜெயா டிவியின் சவால், விஜய்யின் ஜோடி நம்பர் ஒன் போன்ற ரியாலிட்டி  ஷோக்களிலும் தலைக்காட்டிய பிரித்திவிராஜ் இயல்பிலேயே ஒரு கார் பிரியர்.  ஆடி இன்னோவா, மகேந்திரா என நடைமுறைக்கு தகுந்தவாறு அடிக்கடி காரை மாற்றிக் கொண்டே இருப்பாராம். இதுவரை மேற்பட்ட 100க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை உபயோகப்படுத்தி  உள்ளார்.

57 வயதை கடந்தும்  இளமை தோற்றத்தோடு வலம் வரும் பிரித்விராஜ் ஒரு ஜிம் டிரைனர். மேலும் முக்கிய நகரங்களில் டீ ஷாப் வைத்து பிசினஸிலும் நல்ல லாபம் சம்பாதிக்கும் இவரின் சொத்து மதிப்பு 38 முதல் 40 கோடி வரை  இருக்கலாம் என்கிறது தகவல்.

கடந்த சில மாதங்களில் மட்டும் பல லட்சம் இழந்து உள்ளதாக புலம்பி வரும் பப்லு, காதலியுடன்  ஆன பிரிவுக்குப் பின் மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் என்று தத்துவம் பேசி வருகிறார். காலம் கடந்த இவரின் ஞான உதயம்  இவருக்கு பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read:  அள்ளிக் கொடுக்கும் மனைவியின் மூலம் ஆதாயம் அடையும் 5 நடிகர்கள்

Trending News