அது சூர்யாவுக்கான கதை, அவர்தான் நடிக்கணும்.. பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்த அஜித்

Ajith generously gave up on Suriya: அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து 70 நாட்களாக ஒரே செட்யூலில் முடித்து 2024-ம் ஆண்டு சம்மருக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த சூழலில் சூர்யாவின் படம் இப்போது அஜித்தின் கைவசம் வந்திருக்கிறது.

ஏனென்றால் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால் சூர்யா இப்போது கங்குவா படம், அதன் தொடர்ச்சியாக லோகேஷின் இரும்புக் கை மாயாவி, சுதா கொங்கராவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்டாகி கொண்டிருக்கிறார்.

ஆனால் வாடிவாசல் படம் மட்டும் தள்ளி போகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் இதில் மட்டும் அஜித் நடித்தால் இந்த படம் உலகம் முழுவதும் பேசப்படும். வசூலிலும் தாறுமாறான வரவேற்பு கிடைக்கும் என்று வெற்றிமாறன் சூர்யாவிற்கு பதில் அஜித்தை நடிக்க வைக்க பார்த்தார்.

இதுதான் அஜித் கெத்து 

ஆனால் அஜித், அது சூர்யாவுக்கான கதை, அவர்தான் நடிக்கணும், எனக்கு வேண்டாம் என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டார். சூர்யா எப்போது ஃப்ரீ ஆகி வருகிறாரோ அப்போதே அவரை வைத்து வாடிவாசல் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று வெற்றிமாறனிடம் அஜித் கூறியுள்ளார்.

இதுவே வேறு ஏதாவது ஒரு ஹீரோவாக இருந்தால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கக்கூடிய வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை இப்படி வேண்டாம் என்று சொல்லி இருக்க மாட்டார்கள். இந்த கெத்து அஜித்துக்கு மட்டுமே இருக்கு. அவர் பிற நடிகர்களின் திறமையையும், அவர்களுடைய படங்களையும் மதிக்கக்கூடிய மனுஷன். அதனால் தான் ரசிகர்களும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.