Ajith: தமிழ் சினிமாவில் ஆர்ப்பாட்டமே இல்லாத முன்னணி நடிகர் என்றால் அஜித் மட்டுமே. ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் எந்த விதத்திலும் கம்மியாக இல்லை என்பதற்கு இப்ப எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவரை நாங்கள் அவ்வப்போது திரையில் பார்த்து ரசித்தாலே போதும் என்று இவருடைய ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கும் முன் கொஞ்ச நாள் ஓய்வு எடுக்கலாம் என்று மொத்த படக்குழுவும் சென்னை திரும்பி இருக்கிறார்கள்.
இதற்கிடையில் அஜித் விடாமுயற்சி படத்திற்கு பின் நடிக்கப் போகும் படத்திற்கான இயக்குனரை லாக் செய்து இருக்கிறார். சிம்புவிற்கு அடங்காதவன் அசராதவன் அன்பானவன் படத்தையும் விஷாலுக்கு மார்க் ஆண்டனி படத்தையும் கொடுத்த பிரபுவின் மருமகன் தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவருடைய இயக்கத்தில் தான் அஜித் அவருடைய 64வது படத்தில் நடிக்கப் போகிறார்.
Also read: அது சூர்யாவுக்கான கதை, அவர்தான் நடிக்கணும்.. பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்த அஜித்
படத்தின் கதை எப்படி இருக்கும் என்றால் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த நகைச்சுவை படமாக எடுக்கப் போகிறார். இதுவரை அஜித் நடிக்காத கேரக்டரிலும், இவருடைய ட்ரெண்டையே மாற்றும் அளவிற்கு இருக்கப் போகிறதாம். அந்த வகையில் சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாமல் அஜித் அவருடைய ஸ்டைலில் காமெடி கொடுத்தால் எப்படி இருக்கும் என்று இயக்குனர் ஆதிக் புது முயற்சியை கையாள போகிறார்.
இதுவரை அஜித்தை மாஸ் ஆகவும், சென்டிமென்ட், காதல் மற்றும் ரொமான்ஸ் படங்களை பார்த்த ரசிகர்கள் முதன் முதலாக காமெடியில் ரசிக்க வைக்கும் அஜித்தை பார்க்கப் போகிறார்கள். இந்த விஷயம் அஜித்துக்கு புதுமையாக இருந்தாலும் ரசிகர்கள் இதைக் கேள்விப்பட்டதும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். ஒரு பக்கம் இவருக்கு வித்தியாசமான கதை கிடைத்திருக்கிறது.
கண்டிப்பாக அஜித்துக்கு இந்த படம் கை கொடுக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்தாலும், இன்னொரு பக்கம் இது அஜித்துக்கு செட்டாகுமா சொதப்பிடுமா என்ற பயத்தில் புலம்பியும் தவிக்கிறார்கள். ஆக மொத்தத்தில் அஜித்தின் 64வது படம் இதுவரை பார்க்காத ஒரு கேரக்டரில் அஜித்தை பார்க்கலாம். இதை ஆதிக் ரவிச்சந்திரன் அவருடைய பாணியில் அஜித்தை வைத்து முயற்சி செய்யப் போகிறார்.
Also read: பாலாவிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிய அஜித்.. 2 முறை திட்டம் போட்டு பல்பு வாங்கிய சைக்கோ