ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம்! ரஜினியின் திரை வாழ்க்கையில் தோள் கொடுத்த தூக்கிவிட்ட 6 இயக்குனர்கள்

Kollywood Actor Rajini starred with famous directors movies: குரு பார்க்க கோடி நன்மை என்பது  தலைவரின் வாழ்க்கையில் நிச்சயமான ஒன்று. தாயின் மூலம் பெற முடியாத கண்டிப்பை  தாயுமானவனாக இருந்து அவருக்கு புகட்டியவர் அவரின் குரு பாலச்சந்தர். சூப்பர் ஸ்டாரின் பேமஸ் டயலாக் ஆன, “கடவுள் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான். ஆண்டவனே நம்ம பக்கம்” என்ற சொல்லுக்கு இணங்க ஒவ்வொரு தோல்வியின் பின்னும் தேர்ந்த இயக்குனரை மிகச்சரியான நேரத்தில்  அனுப்பி  அவரை கை தூக்கி விட்டார் கடவுள்.

கே பாலச்சந்தர்: சிவாஜி ராவ்க்குள் இருந்த ரஜினியை இனம் கண்டு பிடித்து தமிழ் சினிமாவில் அவருக்கு அட்ரஸ் ஏற்படுத்திக் கொடுத்தவர் இவரே. ரஜினியை நினைத்தாலே இனிக்கும் இல் நடிகராகவும் அபூர்வ ராகங்களில் குணசித்திர நடிகராகவும்  மூன்று முடிச்சில் வில்லனாகவும் தில்லுமுல்லுவில் காமெடியனாகவும் பல வகைகளில் பட்டையை தீட்டி  இவருக்கு தாயுமானவராக இருந்தது கே பாலச்சந்தரரே. மொத்தமாக இவரின் இயக்கத்தில் 7 படங்களில் நடித்துள்ளார் ரஜினி.  திரை வாழ்க்கையை தாண்டி  சூப்பர் ஸ்டார் அவர்கள் சொந்த வாழ்க்கையில் தடுமாறிய போதும் அவரை அரவணைத்து புத்தி புகட்டியவரும் இயக்குனர் சிகரமே.

எஸ் பி முத்துராமன்: கே பாலச்சந்தர் ஒரு முறை பேட்டியின் போது “சிவாஜி ராவ் என்ற வைரத்தை கண்டெடுத்தேன்! தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினேன், என்னை விட முத்துராமன் சார் தான் அந்த வைரத்தை பட்டை தீட்டினார்” என்று புகழ்ந்தார். ஆம் ரஜினியின் ஆரம்ப காலங்களில் புவனா ஒரு கேள்விக்குறியில் ஆரம்பித்து    ஆறிலிருந்துஅறுபது வரை, பிரியா, முரட்டுக்காளை, குரு சிஷ்யன், ராஜா சின்ன ரோஜா போன்ற 25 படங்களை சரியான நேரத்தில் கொடுத்து  ரஜினியை பலமுறை தோல்வியிலிருந்து மீட்டெடுத்த ராமனே இந்த முத்துராமன்.

சுரேஷ் கிருஷ்ணா: சூப்பர் ஸ்டாரின் கேரியரில் மிக முக்கிய படங்களான அண்ணாமலை, பாட்ஷா, வீரா இது மூன்றுக்கும் முக்கிய இடம் உள்ளது. எவர்கிரீன் லோகோ ஆன நீல நிற புள்ளிகளில் பளிச்சிடும் சூப்பர் ஸ்டார் கிராபிக்ஸை அண்ணாமலையில் அறிமுகப்படுத்தியவர் சுரேஷ் கிருஷ்ணா தான். பாட்ஷாவில் கேங்ஸ்டர் ஆக பட்டையை கிளப்பி இருப்பார் இவர். சூப்பர் ஸ்டார் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது குணநலன்கள், வசனங்கள்  படப்பிடிப்பில் அவரது மனநிலை  என்று  அனைத்தையும்  உணர்ந்த நிலையில் உணர்ச்சி பூர்வமாக புத்தகம்  ஒன்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அபூர்வ ராகங்கள் முதல் தலைவர்-171 வரை அசுர வளர்ச்சியால் வாங்கிய சம்பளம்.. பரட்டையால் ஏமாற்றப்பட்ட ரஜினி

கே எஸ் ரவிக்குமார்: சூப்பர் ஸ்டாரை வைத்து இவர் இயக்கிய முத்து இந்தியாவை தாண்டி ஜப்பானிலும் வெற்றிக்கொடி நாட்டி தலைவனை உலக அறியச் செய்தது . இதனை  தொடர்ந்து படையப்பாவிலும் ஆளுமை மிக்க தலைவராக ரஜினியை தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேத்தார் கே எஸ் ரவிக்குமார்.

பி வாசு: மன்னன் படத்தில் முதன்முறையாக சூப்பர் ஸ்டாரை மக்களுடன் மிக நெருக்கமாக ஒன்ற வைத்திருந்தார் பி வாசு அவர்கள். உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்தக்காரனாகவும் தாயை காக்கும் தனயனாகவும் வந்து தலைவரை மக்களின் மனதை ஆள வைத்து விட்டார் இயக்குனர். இப்படத்தில் கவுண்டமணி உடனான காமெடி காம்போ இன்றளவும் மீம்ஸ்களில் வலம் வருகிறது.

நெல்சன்: வயதான பின்பு இவரை யாரும் கண்டு கொள்ளாமல் போய்விட்டார்களோ என்று சில தோல்வி படங்களில் துவண்டு போன தலைவரை கம்பேக் கொடுக்க வைத்தது நெல்சன் தான். ஜெயிலரில் எனர்ஜி குறையாது அதே மிடுக்குடனும் தோற்றத்துடனும் தலைவரை களம் இறக்கி பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக்கினார் நெல்சன்.

Also Read: பைத்தியக்கார பட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றிய 3 பிரபலங்கள்.. 1000 படத்திற்கும் மேல் நடித்த ஒரே நடிகை

Trending News