செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கவர்ச்சி காட்டாமல் கேரியரில் ஜெயித்த 5 நடிகைகள்.. மாடர்ன் நதியாவாக இருக்கும் சாய் பல்லவி

5 actresses no glamour acting: முழுசா நனைந்த பிறகு முக்காடு எதுக்கு என்று சொல்வார்கள். அதற்கேற்ற மாதிரி சினிமாவிற்குள் வந்து விட்டால் கொடுக்கிற கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி அனைவரும் நடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். நடிகைகள் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாகவே நடித்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவர்களுக்கு தேடி வரும். ஆனால் இந்த ஒரு விஷயத்தை மொத்தமாகவே தகர்த்தெறிந்து கவர்ச்சியை காட்டாமல் கேரியரில் ஜெயித்த நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

ரேவதி: 80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு இவருக்கென்று ரசிகர்களின் மனதில் ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவருடைய குழந்தைத்தனமான நடிப்பும், எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி அசாத்திய திறமையை கொண்டு நடித்து வெற்றி பெற்று விடுவார். அப்படிப்பட்ட இவருடைய மிகப்பெரிய சிறப்பே கவர்ச்சியை காட்டித்தான் நடிக்க வேண்டும் என்று எந்தவித அவசியமும் இல்லை என்பதே சுட்டிக்காட்டும் விதமாக குடும்ப கதையாகவும், பெண்களின் நலனுக்கு ஏற்ற மாதிரி கருத்துள்ள படத்திலும் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

நதியா: தற்போது இவருடைய 57 வயதிலும் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகு மாறாமல் எப்போதுமே பிரகாசத்துடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் தமிழில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் பல ஹீரோக்களையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு கவர்ச்சி காட்டாமல் நடித்திருக்கிறார்.

Also read: புருஷன் மாதிரியே ஷாலினிக்கு இருக்கும் தங்கமான மனசு.. உண்மையை மனம் திறந்து பேசிய நடிகர்

ஷாலினி: குழந்தை நட்சத்திரமாக எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோயின் ஆக சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் நடித்த கொஞ்சப் படத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார். அதற்கு காரணம் இவருடைய ஹோம்லியான லுக்கும், எதார்த்தமான நடிப்பும் தான். அதனால் தான் அஜித் இவர் மீது காதல் வயப்பட்டு திருமணத்தை செய்து கொண்டார். இவர் மட்டுமல்லாமல் நடிகர் மாதவனுக்கும் இவர் மீது க்ரஷ் இருந்திருக்கிறது. அதனால் தான் அலைபாயுதே படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க்அவுட் ஆயிருக்கும்.

சாய் பல்லவி: இந்த காலத்திலும் இப்படி ஒரு பொண்ணா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு குடும்ப குத்து விளக்காகவும், கட்டுக்கோப்பாகவும் தான் நடிப்பேன் என்று கவர்ச்சி நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டார். அந்த வகையில் இவரை ஒரு மாடர்ன் நதியாகவும் சொல்லலாம். இவருடைய சிரிப்புக்கும் டான்ஸ்க்கும் மட்டுமே ரசிகர்கள் இவர் மீது ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்: அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு வரும் கீர்த்தி சுரேஷ் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் மற்ற நடிகைகள் மாதிரி கவர்ச்சியை ஆயுதமாக எடுக்காமல் நடிப்பை மட்டும் தூக்கலாக காட்ட வேண்டும் என்பதில் இவருடைய கொள்கையாக வைத்திருக்கிறார். அதனால் தான் குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது. இருந்தாலும் கொஞ்சம் கூட கவலை இல்லாமல், நான் இப்படித்தான் என்று ஒரு வரைமுறைக்குள் இருந்து அதற்கேற்ற மாதிரி நடிக்கிறார்.

Also read: மீண்டும் தமிழ் மார்க்கெட்டை பிடித்த கீர்த்தி சுரேஷ்.. கைவசம் இவ்வளவு படங்களா.?

Trending News