ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சூப்பர் ஸ்டார் ரூட்டுக்கு மாறிய அஜித்.. 16 கிலோ எடை குறைத்ததன் ரகசியம் இதுதான்

Ajith Weight Loss Secret: அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். எப்போதோ முடிந்திருக்க வேண்டிய படம் மாத கணக்கில் இழுத்துவிட்டது. அதனாலயே படக்குழு இப்போது ஷூட்டிங்கை விரைவாக முடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அஜித்தும் இப்படத்துக்காக 16 கிலோ வரை தன்னுடைய எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அந்த போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் இது எப்படி முடிந்தது என்பதுதான் ரசிகர்களின் ஆர்வமான கேள்வியாக உள்ளது.

ஏனென்றால் அஜித்துக்கு சில உடல்நல பிரச்சனைகள் இருக்கிறது. அதன் விளைவாகத்தான் அவருடைய உடல் எடையும் அதிகரித்தது. ஆனால் இப்போது அவர் எடையை குறைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இதற்கு அஜித் பின்பற்றிய உணவு பழக்கம் தான் மூல காரணமாக இருக்கிறது.

Also read: அஜித்தின் ட்ரெண்ட்டை மாற்றப் போகும் பிரபுவின் மருமகன்.. கேட்கவே காமெடியாக இருக்கு

அதன்படி அஜித் இப்போது அசைவ உணவு சாப்பிடுவதை முழுமையாக நிறுத்தி விட்டாராம். வெறும் சைவ உணவுகளும், காய்கறிகளையும் மட்டுமே சாப்பிட்டு தன்னுடைய எடையை குறைத்திருக்கிறார். இது பலனளித்த நிலையில் இன்னும் எடையை குறைக்கவும் அவர் ஆர்வத்துடன் இருக்கிறாராம்.

மேலும் சினிமாவுக்காக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இனிமேல் இதை அவர் ஃபாலோ செய்ய போகிறாராம். அதன்படி அஜித் அசைவ உணவுகளே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அப்படி பார்த்தால் சூப்பர் ஸ்டாரின் ரூட்டுக்கு திரும்பி இருக்கிறார் ஏ கே.

ஏனென்றால் ஒரு காலத்தில் அசைவ உணவுகளை வெளுத்து கட்டிய ரஜினி இப்போது சைவத்திற்கு மாறி இருக்கிறார். சில உடல்நல பிரச்சனைகளின் காரணமாகவே அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார். இதை அவர் ஒரு மேடையில் கூட வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதையே அஜித்தும் இப்போது பின்பற்றி வருகிறார்.

Also read: பிட்டு பிட்டாக காப்பி அடித்த மகிழ் திருமேனி.. டபுள் ஓகே சொன்ன அஜித், இந்த ஹாலிவுட் படம்தான் விடாமுயற்சியா.?

Trending News